Home
Mobile

2025 எங்கள்து.. 200MP கேமரா, 2K டிஸ்பிளே, 90W சார்ஜிங். இப்படி ஒரு Xiaomi போனுக்கு தானே இந்தியாவே வெயிட்டிங்!

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய மொபைல் சந்தை எங்களுடையது என்று கூறும்படியாக, சீன மொபைல் நிறுவனமான ஷாவ்மீ, தொடர்ச்சியான முறையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்நிறுவனம், ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு இந்திய சந்தையில் பரபரப்பை கிளப்பி விட்டுருந்தது.

அதனை தொடர்ந்து எல்லா வகையான பட்ஜெட் வாசிகளையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ்.. 3 வெவ்வேறு பட்ஜெட்களில் 3 ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுதவிர்த்து 2025 ஆம் ஆண்டு தொடங்கியதுமே ரெட்மி டர்போ 4 (Redmi Turbo 4) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என்றும், அதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ எப்7 (Poco F7) என்கிற பெயரில் வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு Xiaomi போனுக்கு தானே இந்தியாவே வெயிட்டிங்!

மேலும் ஷாவ்மீ சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஷாவ்மீ சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்களும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இது ஷாவ்மீ 15 சிவி என்கிற பெயரில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையில் ஷாவ்மீ நிறுவனத்தின் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அது ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனாகும். ஷாவ்மீ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஷாவ்மீ 15 (Xiaomi 15) மற்றும் ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro) மாடல்களை போலவே முதலில் சீனாவில் அறிமுகமாகும்; பின்னர் இந்தியாவிற்கு வரும். இதை உறுதிப்படுத்தும்படி ஷாவ்மீ 15 அல்ட்ராவானது பிஐஎஸ் (Bureau of Indian Standards - BIS) இணையதளத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷாவ்மீ 15 அல்ட்ராவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 2கே குவாட்-கர்வ்டு டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபிளாக்ஷிப் சிப்செட் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 200-மெகாபிக்சல் லார்ஜ்-அபெர்க்ஷர் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் எப் /1.63 அபெர்க்ஷர் உடனான 1-இன்ச் டைப் மெயின் கேமராவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிர்து

கூடவே இது ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்களை பெறலாம். ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை வழங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இதன் பேட்டரி திறன் முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 14 அல்ட்ராவை தான் போலவே இருக்கும். அது 90W வயர்டு சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும்.

ஷாவ்மீ 15 அல்ட்ராவின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.1,09,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி டர்போ 4 அல்லது போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 7000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (MediaTek Dimensity 8400) சிப்செட், ஹோல் பஞ்ச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப். இதை தவிர்த்து ரெட்மி டர்போ 4 அல்லது போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஷாவ்மீ சிவி 5 ப்ரோ அல்லது ஷாவ்மீ 15 சிவி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? 1.5கே குவாட்-கர்வ்டு டிஸ்பிளே, டூயல் ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டுகளுடன் டூயல் செல்பீ கேமரா சென்சார்கள், பேக் பேனலின் மேல் இடது மூலையில் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல், லிஃபோட்டோ லென்ஸ், ஃபைபர் கிளாஸ் பேக் பேனல் மற்றும் மெட்டல் சைட் ஃபிரேம், 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Ultra 200MP large aperture periscope telephoto sensor India Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X