Home
Mobile

2025 ஆரம்பமே அசத்தல்.. ஒன்னா வரும் OnePlus 13, OnePlus 13R.. எந்த தேதி? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

2025 ஆம் ஆண்டு ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று நினைக்க தோன்றும்படியாக.. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) தொடர்பான 2 எதிர்பார்ப்புகள் "அப்படியே" உண்மையாகி உள்ளன. அதென்ன எதிர்பார்ப்புகள்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

முதல் எதிர்பார்ப்பு - ஒன்பிளஸ் 13-ன் இந்திய அறிமுகம் தொடர்பானது. சீனாவில் முன்கூட்டியே அறிமுகமானதை போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வழக்கத்தை விட முன்னதாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது உண்மையாகி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லான்ச் டைம்லைன் பாரம்பரியத்தை பின்பற்றும் பட்சத்தில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் இங்கே அறிமுகமாகி இருக்க வேண்டும்.

2025 ஆரம்பமே அசத்தல்.. ஒன்னா வரும் OnePlus 13, OnePlus 13R!

ஆனால் இம்முறை 2025 ஜனவரி முதல் வாரமே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகத்தை காணவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி அன்று ஒரு சர்வதேச வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது அதில் உலகளாவிய சந்தைகளுக்கான ஒன்பிளஸ் 13 அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இரண்டாவது எதிர்பார்ப்பு - ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டுமே தனித்தனியாக அறிமுகமாகாமல், ஒன்றாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதுவும் உண்மையாகி, உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13 உடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனும் இணைந்து அறிமுகமாகும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 12ஜிபி / 16ஜிபி / 24ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை இது 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60fps வரை மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30 fps வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? நம்பகமான சீன டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும். மேலும் இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் செக்கண்டரி சென்சார் + 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவைகள் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். முன்னரே குறிப்பிட்டபடி இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியுடன் அனுப்பப்படலாம்.

ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.65,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 OnePlus 13R India Launch on Same Day January 7 2025 Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X