Home
Mobile

OPPO ஒரே போடு.. ரூ.15,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 50MP கேமரா, IR பிளாஸ்டர்.. எந்த மாடல்?

நேற்று வரையிலாக.. 2025 ஏப்ரல் மாதத்தில் 6 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருந்ததது மற்றும் அறிமுகம் செய்யப்படலாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இந்த எண்ணிக்கை அப்படியே "கிட்டத்தட்ட" இரட்டிப்பாகி உள்ளது. காரணம் - ஒப்போ நிறுவனத்தின் 3 புதிய மாடல்கள் தான்!

அதென்ன மாடல்கள்? ஒப்போ நிறுவனம் அதன் கே சீரீஸ்-ன் கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன் சீரிஸின் கீழ் ஒப்போ கே13 (Oppo K13), ஒப்போ கே13 ப்ரோ (Oppo K13 Pro) மற்றும் ஒப்போ கே13எக்ஸ் (Oppo K13x) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

OPPO ஒரே போடு.. ரூ.15,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்!

ஒப்போ கே13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் (Snapdragon 6 Gen 4 SoC) மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் FHD+ ரெசல்யூஷன் உடனான 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம்

மேலும் இது ஒரு பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும், இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 50MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா இடம்பெறலாம். குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஐஆர் பிளாஸ்டர், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரலாம்

மறுகையில் உள்ள ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 8400 சிப்செட் (Dimensity 8400) உடன் அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் ஒப்போ கே13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வரலாம். இப்போதைக்கு இந்த 3 ஸ்மார்ட்போன்களின் சீன வெளியீடு விரைவில் நடக்கும் என்கிற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் இல்லை.

ஒப்போ கே13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஏப்ரல் 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது;செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
01. மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் (Moto Edge 60 Fusion) - இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2
02. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra) - சீனாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 10
03. ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) - இந்தியாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11

04. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) - இந்தியாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
05. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) - சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்
06. விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s) - சீனாவில் ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @yabhishekhd கூற்றுப்படி, ரியல்மி நிறுவனம் 2 புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை "உடனடி வெளியீட்டிற்கு" தயாராக வைத்து உள்ளது. ஒன்று - ரியல்மி 14டி (Realme 14T) மாடல் ஆகும். இன்னொன்று ரியல்மி சி75எக்ஸ் (Realme C75x) மாடல் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K13 Oppo K13 Pro Oppo K13x launching soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X