Home
Mobile

ஆண்ட்ராய்டு வரலாற்றில் முதல் முறையாக.. 100MP 1:1 ஸ்கொயர் செல்பீ கேமரா.. OPPO அசத்தல்.. எந்த போனில்?

ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்காக 100எம்பி 1:1 செல்பீ கேமராவை (100MP 1:1 selfie camera) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியி இருந்தன. தற்போது அது முதலில் எந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக்கின் படி, மேற்குறிப்பிட்ட செல்பீ கேமராவானது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸில் அறிமுகமாகலாம். வெளியான லீக்கின்படி - ஒப்போ தற்போது ஒரு புதிய 100எம்பி 1:1 ஸ்கொயர் பிராண்ட் கேமராவை சோதித்து வருகிறது. இந்த கேமரா, சுமார் 1/2.5 இன்ச் அளவுள்ள சாம்சங் சென்சாரை அடிப்படையாக கொண்ட, நேட்டிவ்லி கஸ்டமைஸ்டு 100எம்பி ஸ்மால் சென்சார் சொல்யூஷனை பயன்படுத்துகிறது.

100MP 1:1 ஸ்கொயர் செல்பீ கேமரா.. OPPO அசத்தல்.. எந்த போனில்?

மேலும் இந்த கேமரா "2என்எம் தொழில்நுட்ப சீரீஸை பயன்படுத்தும் ஒரு புதிய போனுக்காக" சோதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே தான் இது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸ் 2என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட வரவிருக்கும் டைமென்சிட்டி 9600 சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக வெளியான அறிக்கை, ஒப்போ நிறுவனம் சதுர வடிவ முன்பக்க கேமரா சென்சார்களை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டது, ஆனால் எந்த மாடலுக்கு அது முதலில் கிடைக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. தற்போது கிடைத்த புதிய லீக் - அது ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் உடன் நேரடியாக இணைக்கிறது.

1:1 சென்சாரின் பயன்பாடு என்ன? இதில் உள்ள மிகப்பெரிய மாற்றம் 1:1 சதுர வடிவமைப்பு ஆகும். பொதுவாக செங்குத்தான செல்பீக்களுக்காக மேம்படுத்தப்பட்டிருக்கும் பாரம்பரிய செல்பீ கேமராக்களை போலல்லாமல், ஒரு சதுர வடிவிலான சென்சாரால் அகலமான மற்றும் நெகிழ்வான ஒரு ஃபிரேமை படம்பிடிக்க முடியும். இது, பயனர்கள் போனை சுழற்றாமலேயே செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் செல்பீக்களையும் வீடியோக்களையும் எடுக்க அனுமதிக்கிறது.

குறிப்பாக இது க்ரூப் போட்டோக்கள் மற்றும் வீடியோ கால்களை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தை ஐபோன் 17 சீரிஸில் அறிமுகப்படுத்தியது, இது சென்டர் ஸ்டேஜ் எனப்படும் ஸ்கொயர் செல்பீ கேமரா சென்சாரை பயன்படுத்துகிறது. இருப்பினும், ஆப்பிளின் இந்த சொல்யூஷன் 24எம்பி சென்சாரை பயன்படுத்துகிறது. ஆனால் ஒப்போ மிகவும் அதிகமான 100எம்பி வெர்ஷனை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் "100எம்பி செல்பீ மற்றும் ரியர் மல்டி-ஃபோக்கல் லென்ஸ்களை" விளம்பரப்படுத்தக்கூடும் என்றும் அந்த லீக் குறிப்பிடுகிறது, இது செல்பீ மற்றும் பிரைமரி கேமரா ஆகிய இரண்டின் நெகிழ்வுத்தன்மையிலும் வலுவான கவனம் செலுத்தப்படுவதை உணர்த்துகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்போ போதைக்கு, இந்த செல்பீ கேமரவையும், அது சோதனை செய்யப்படுவதையும் - ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஒப்போ தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, சமீபத்தில் தான் ஒப்போ அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதற்கிடையில் விரைவில் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒப்போ ஏ6சி (OPPO A6c) ஸ்மார்ட்போன் ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதம், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட, பட்ஜெட் விலைப்பிரிவை இலக்காக கொண்ட ஒப்போவின் இந்த ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது, ஏற்கனவே உள்ள ஒப்போ ஏ6கே (Oppo A6x), ஒப்போ 6 (Oppo A6) மற்றும் ஒப்போ ஏ6எஸ் (Oppo A6s) ஆகிய மாடல்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த மேலதிக விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். Image Courtesy: Gizmochina

Best Mobiles in India

English summary
Oppo Find X10 Series Tipped to Pack 100MP 1 1 Square Selfie Camera First Time in Android Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X