Home
Mobile

பட்ஜெட் வாசிகள் ஹேப்பி அண்ணாச்சி.. ரூ.13999 க்கு 7000mAh பேட்டரி உடன் புது OPPO போன்.. எந்த மாடல்?

ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த கையோடு, கூடிய விரைவில்ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒப்போ ஏ6சி (OPPO A6c) ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒப்போ ஏ6 சீரிஸின் 4வது மாடல்: கடந்த ஏப்ரல் மாதம், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட, பட்ஜெட் விலைப்பிரிவை இலக்காக கொண்ட ஒப்போவின் இந்த ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது, ஏற்கனவே உள்ள ஒப்போ ஏ6கே (Oppo A6x), ஒப்போ 6 (Oppo A6) மற்றும் ஒப்போ ஏ6எஸ் (Oppo A6s) ஆகிய மாடல்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.13999 க்கு 7000mAh பேட்டரி உடன் புது OPPO போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ6எஸ் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் - பெரிய 7,000mAh பேட்டரி ஆகும். மேலும் இந்த போன் ஒரு ஸ்டைலான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த காம்பினேஷன் மற்ற பட்ஜெட் விலை போன்கள் மத்தியில் தனித்து நிற்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ6எஸ் விலை: எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.15,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் மற்றும் 64ஜிபி ஆப்ஷன் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் மற்றொரு ஆப்ஷன் ஆகவும் அறிமுகப்படுத்தப்படும், இது ரூ.16,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஸ்மார்ட்போன் துறையில் விலை உயர்வுகள் அதிகரித்து வருவதால், மெமரி செலவுகள் உயர்வால் இதில் 6GB ரேம் ஆப்ஷன் இல்லை என்பதில் ஆச்சரியமில்லை.

ஒப்போ ஏ6எஸ் அறிமுக தேதி: சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இருப்பினும் இதன் அறிமுகம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரமே நடைபெறும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்த வார இறுதியில் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்போ தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு செய்வது போலவே, இந்த மாடலையும் ஆஃப்லைன் சந்தையை இலக்காக கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், இது அதே அம்சங்களுடன் தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி உள்ளது, இது வழக்கமான பயன்பாட்டில் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். இதுவே இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விற்பனை அம்சமாக இருக்கலாம்.

இருப்பினும், சார்ஜிங் ஸ்பீட் ஆனது 15W ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இது பட்ஜெட் பிரிவில் கூட மிகவும் மெதுவாகும், மேலும் பேட்டரி திறனை கருத்தில் கொள்ளும்போது சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.75-இன்ச் எச்டி பிளஸ் (1570×720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் ப்ரைட்னஸையும் (HBM மோட்) கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 30 fps வேகத்தில் 1080P வீடியோ பதிவு செய்யும் வசதியுடன் கூடிய 13MP ப்ரைமரி கேமராவும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5MP செல்பீ கேமராவும் உள்ளன.ஒட்டுமொத்தமாக இந்த கேமரா அமைப்பு மிகவும் எளிமையானது மற்றும் சாதாரண புகைப்படங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது யுனிசாக் டி7250 சிப்செட் மூலம் இயங்குகிறது, இது பெரும்பாலும் என்ட்ரி லெவல் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்செட் ஆகும். ஆக ஒப்போ ஏ6சி ஆனது - தினசரி பயன்பாட்டிற்கான வழக்கமான பணிகளை செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், ஹெவி வொர்க் தேவைப்படும் எதையும் செய்யாது என்றும் கூறலாம்.

Best Mobiles in India

English summary
Oppo A6c With 7000mAh Battery Under Rs 15000 Budget Segment Launching Soon in India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X