Home
Mobile

7025mAh பேட்டரி, IP69, மூன்று 50MP Hasselblad கேமரா! புது OPPO போன் அறிமுகம்.. ஆபர் விலையில் மே.28 முதல் SALE!

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வந்துள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சீரீஸ் சிப்செட்
- ஹேசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட ரியர் கேமரா செட்டப்
- ட்ரிபிள் 50-மெகாபிக்சல் கேமராக்கள்
- 7025mAh பேட்டரி

7025mAh பேட்டரி, IP69, மூன்று 50MP Hasselblad கேமரா! புது OPPO போன்!

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விலை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விற்பனை, ஆபர்: அறிமுக சலுகையாக, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் மீது 10 சதவீத உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இது மே 28 ஆம் தேதி அன்று அமேசான் இந்தியா மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன்- லாவெண்டர் ஸ்கை, மிட்நைட் கிரே மற்றும் சன்செட் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1,256 x 2,760 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz டச் சாம்பிளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 1,800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 460 ppi பிக்சல் டென்சிட்டி
- 1.07 பில்லியன் கலர்ஸ்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட்
- இம்மொர்டாலிஸ் G925 MC12 GPU
- 12GB LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ஹாசல்பிளாட் நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 120 டிகிரி பீல் ஆப் வியூ கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (f/2.6) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவு
- 32-மெகாபிக்சல் (f/2.4) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்

- 7025mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 6.1, ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஜிபிஎஸ், GLONASS, கலிலியோ, QZSS மற்றும் நாவிக் (NavIC)
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

- ப்ராக்ஸிமிட்டி சென்சார்
- ஆம்பியன்ட் லைட் சென்சார்
- கலர் டெம்பரேச்சர் சென்சார்
- இ-காம்பஸ்
- ஆக்சிலரோமீட்டர்
- கைரோஸ்கோப்
- லேசர் ஃபோகஸிங் சென்சார்
- ஸ்பெக்ட்ரல் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- அளவீட்டில் 156.98x73.93x7.99 மிமீ
- எடையில் சுமார் 202 கிராம்

Best Mobiles in India

English summary
Oppo Find X9s With 7025mAh battery Triple 50MP Hasselblad Camera Launched in India Sale Starts May 28 Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X