ஜூலை 7-11 க்குள்.. இந்தியாவில் அறிமுகமாகும் 9 புது போன்கள்.. OnePlus முதல் Motorola வரை.. இதோ லிஸ்ட்!
இந்த வாரம் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான வாரம் என்பது போல.. ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 ஆம் தேதிக்குள் ஆக, இந்திய சந்தையில் மொத்தம் 9 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. என்னென்ன மாடல்கள் சரியாக எந்த தேதியில் (New Phone Launch July 2025) அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்?
1. ஜூலை 7 - ஹானர் எக்ஸ்9சி 5ஜி (Honor X9c 5G)
2. ஜூலை 8 - ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI+ Pulse 5G)
3. ஜூலை 8 - ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI+ Nova 5G)

4. ஜூலை 8 - ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5)
5. ஜூலை 8 -ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5)
6. ஜூலை 9 - சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7)
7. ஜூலை 9 - சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7)
8. ஜூலை 9 - மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G)
9. ஜூலை 11 - இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி (Infinix Hot 60 5G)

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: வங்கதேசத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ அறிமுகமான வேகத்தில், இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி மாடலின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் - இது ஒரு பிரத்யேக ஒன் டாப் ஏஐ பட்டன் (One Tap AI Button) உடன் வருகிறது
இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில், பவர் மற்றும் வால்யூம் பட்டன்களுக்கு கீழே அமைந்துள்ள ஒன் டாப் ஏஐ பட்டன் ஆனது பல்வேறு செயல்பாடுகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கண்ட்ரோல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் பிரஸ், டபுள் பிரஸ் மற்றும் லாங் பிரஸ்-ஐ ஆதரிக்கிறது.
மேலும் அதிகாரப்பூர்வ இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி மைக்ரோசைட்டின் படி, இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 7020 சிப்செட், LPDDR5x ரேம், 90fps கேமிங் மற்றும் 7.8mm ஸ்லிம் சேசிஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Shadow Blue, Tundra Green மற்றும் Sleek Black ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏஐ பிளஸ் பல்ஸ்4ஜி மற்றும் நோவா 5ஜி அம்சங்கள்: நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6என்எம் யுனிசாக் டி8200 ( 6nm Unisoc T8200) சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் இது டூயல் 50எம்பி கேமராக்கள், 5000mAh பேட்டரி மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஆகிய முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கும். நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் Black, Blue, Green, Pink அல்லது Purple ஆகிய கலர்களில் வெளியாகலாம்.
மறுகையில் உள்ள பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது "அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லாத" 12 என்எம் யுனிசாக் டி7250 (12nm Unisoc T7250) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது சிப்செட்டில சிறிது சமரசம் செய்தாலும் கூட இது நோவா 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள அதே கேமரா மற்றும் பேட்டரியை வைத்திருக்கிறது.
நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வட்ட வடிவிலான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது செவ்வக வடிவிலான கேமராஸ் செட்டப்பை பேக் செய்கிறது. இது மட்டுமே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான "காட்சி மாறுபாட்டை" வழங்குகிறது. மீதமுள்ள வடிவமைப்பு எல்லாம் ஒரே மாதிரியே உள்ளன.
மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ்-இன் இந்தியமயமாக்கப்பட்ட வேரியண்ட் ஆன நெக்ஸ்ட் குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கொண்டு இயங்குகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த எளிதான, ப்ளோட்டிங் இல்லாத மற்றும் ஏஐ கொண்டு இயங்கும் நுண்ணறிவு அம்சங்களும் இடம்பெறும்.


Click it and Unblock the Notifications








