Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. ஜூலை 12 முதல் விற்பனை.. 7100mAh பேட்டரி, 50MP SONY கேமரா.. OnePlus-ன் புது போன்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி அன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அவைகள் - ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) மாடல்களாகும்.

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் சிப்செட், பேட்டரி, கேமரா ஆகிய சில முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தி உள்ளது. அதென்ன அம்சங்கள்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ஜூலை 12 முதல் விற்பனை.. 7100mAh பேட்டரி.. OnePlus-ன் புது போன்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 சிப்செட்: இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட்டால் இயக்கப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது இந்த சிப்செட் 1.47 மில்லியனுக்கும் அதிகமான AnTuTu ஸ்கோரை பெற்றுள்ளது என்றும் கூறுகிறது.

இந்த விலைப்பிரிவில் இது மிக உயர்ந்த மதிப்பெண் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது. மேலும் இந்த சிப்செட் இது LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த சிப்செட் மற்றும் ரேம் கூட்டணி ஆனது BGMI மற்றும் COD மொபைலில் 120fps கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 பேட்டரி: இது மிகப்பெரிய 7,100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலில் உள்ள 5500mAh பேட்டரி உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும்.

மேலும் இந்த பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் 59 நிமிடங்களில் 1% முதல் 100% வரை சார்ஜ் ஆகும் என்பதையும் ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வெறும் 10 நிமிட சார்ஜ் ஆனது 6 மணிநேர யூட்யூப் பிளேபேக்கை உறுதியளிக்கிறது.

ஜூலை 12 முதல் விற்பனை.. 7100mAh பேட்டரி.. OnePlus-ன் புது போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரத்யேக சிஸ்டம்-லெவல் சார்ஜிங் மேனேஜ்மென்ட் சொல்யூஷன் ஆன பேட்டரி ஹெல்த் மேஜிக் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் பேட்டரி நிலைத்தன்மையை பராமரிக்கவும் அதன் ஒட்டுமொத்த ஆயுளை நீட்டிக்கவும் சார்ஜிங் நடத்தையை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கிறது என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பைபாஸ் சார்ஜிங் மூலம், கேமிங் செய்யும் போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரிக்கு பதிலாக சார்ஜரிலிருந்து நேரடியாக சக்தியை பெறும் என்றும், இதனால் ஸ்மார்ட்போனின் வெப்ப உற்பத்தி கணிசமாக குறையும் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது; மேலும் இது பேட்டரி தேய்மானத்தைக் குறைக்கிறது மற்றும் பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 கேமரா: இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி சோனி LYT-600 1/1.95″ ப்ரைமரி சென்சார் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சென்சார் ஒன்பிளஸ் 13 சீரிஸின் அதே மேம்பட்ட ரா எச்டிஆர் (RAW HDR) அல்காரிதம் மற்றும் ரியல் டோன் எக்ஸ்போஷர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது.

இந்த கேமரா தொழில்நுட்பங்கள் ஆனது இது கிளியர் ஆன, துடிப்பான வண்ணங்களை கொண்ட மற்றும் இயற்கையான ஸ்கின் டோன்களை வழங்கும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR) கேப்ச்சர் இடம்பெறும் என்பதும், ப்ரைமரி கேமராவனது 4K 60fps வரை HDR வீடியோ ரெகார்ட்-ஐ ஆதரிக்கும் என்பதும் கூட உறுதி செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 விற்பனை விவரங்கள்: ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 மற்றும் ஜூலை 9 ல் அறிமுகமாகும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஆகிய 3 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகளுமே ஜூலை 12 முதல் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 எதிர்பார்க்கப்படும் விலை: விலை நிர்ணயம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் வாய் திறக்காமல் இருந்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் "முன்னோடியான" ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலின் விலையை வைத்து பார்க்கும் போது, இது ரூ.25,000 க்கு அருகிலான விலை வரம்பில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE5 Dimensity 8350 Apex 7100mAh battery Confirmed Sale Begins July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X