Motorola மேட்டர் ஓவர்.. பட்ஜெட் விலையில் Samsung-ன் புது FE மாடல்.. Galaxy Unpacked 2025 நிகழ்வில் சர்ப்ரைஸ்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு (Galaxy Unpacked Event) வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடக்கவுள்ளதை உங்களில் பலரும் ஏற்கனவே அறிந்து இருக்கலாம்; அதில் சிலர் - இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதையும் அறிந்திருக்கலாம்
அதாவது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதை அறிந்து இருக்கலாம். ஆனால் வெகு சிலர் மட்டுமே - இந்நிகழ்வில் மூன்றாவது போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆக "மிகவும் மலிவு விலையிலான" கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ (Galaxy Z Flip 7 FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை அறிவர்!

தற்போது இந்த 3வது ஸ்மார்ட்போனின் அறிமுகம் "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுவிட்டது. நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன் கேஸ் உற்பத்தியாளரான ஸ்பைஜென் (Spigen) ஆனது தற்செயலாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஆகிய இரண்டிற்குமான கேஸ்களை அதன் வலைத்தளத்தில் பட்டியலிட்டதாக தெரிகிறது.
வெளியான வேகத்தில் அகற்றப்பட்ட ஸ்மார்ட்போன்களின் கேஸ் புகைப்படங்கள் ஆனது எந்த விவரங்களையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், நேற்று வரையிலாக வருமா வராதா என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாடலின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக எதிர்பார்த்ததை போலவே சாம்சங் நிறுவனம் இந்தாண்டு அதன் வழக்கமான ஃபிளிப் மாடலை மட்டுமின்றி, அதன் மலிவு விலை வேரியண்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது 99% உறுதியாகிவிட்டது!
முன்னதாக வெளியான லீக்ஸ் தகவலின்படி ஸ்டாண்டர்ட் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது சாம்சங்கின் பிளாக்ஷிப் மரபை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உயர்நிலை வன்பொருள் மற்றும் மோட்டோரோலாவின் சமீபத்திய ரேஸர் சீரிஸிற்கு போட்டியாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்பிளேவுடன் வரக்கூடும்.
இருப்பினும், சில பயனர்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் சிப்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக சாம்சங் அதன் சொந்த எக்ஸினோஸ் சிப்செட்டிற்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது தான். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஆக இருக்கும், மேலும் பெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி செயல்திறன் தொடர்பான விஷயங்களில் மாற்றங்களை கொண்டுவரலாம்.

மறுகையில் உள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ ரேஸர் 2025 மற்றும் நுபியா ஃபிளிப் போன்ற போட்டியாளர்களை - மிகவும் மலிவு விலையில் எதிர்கொள்ளலாம். இது கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மாடலில் நாம் பார்த்த அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்றும், சில கேலக்ஸி எஸ் 24 மாடல்களில் பயன்படுத்தப்பட்ட எக்ஸினோஸ் 2400 சிப்செட்டின் டோன்-டவுன் வெர்ஷன் ஆன எக்ஸினோஸ் 2400e சிப்செட்டால் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஜூலை 9 நடக்கும் நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7, சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7, சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ ஆகிய 3 ஸ்மார்ட்போன்கள் உடன் சேர்த்து சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனும் (Samsung First Tri-fold Smartphone) அறிமுகம் செய்யப்படலாம் என்று ஒரு டிப்ஸ்டர் (Instant Digital) தெரிவித்துள்ளார்.
சாம்சங் அதன் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டாலும் கூட அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வணிக ரீதியாகக் கிடைக்கும் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆக ஹவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் (Huawei Mate XT Ultimate) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடம் கழித்து, சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
விலையை பொறுத்தவரை சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் $2,800 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,39,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மீதமுள்ள விவரங்கள் ஜூலை 9 ஆம் தேதியன்று அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் அறிவிக்கப்படலாம். இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.


Click it and Unblock the Notifications








