Home
Mobile

வர்மா.. பொருளு வேற மாறி இருக்கு.. மீண்டும் அறிமுகமான பவர்ஃபுல் ஆன Realme போன்.. ஜூலை 20 முதல் விற்பனை!

இது தற்செயலாக நடக்கிறதா அல்லது போட்டிக்காக நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் நடக்கிறது. விஷயம் என்னவென்றால் - ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போனை இம்மாதம் (ஜூலை 16 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ரியல்மி நிறுவனமும் அதன் அதன் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் (Realme 13 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களை இம்மாத இறுதிக்குள் (சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தின் மீது கவனம் செலுத்தும் என்று பார்த்தால்.. போட்டிபோட்டுக்கொண்டு பழைய ஸ்மார்ட்போன்களுக்கான புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் புதிய சன்செட் டூன் கலர் ஆப்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று 'டீஸ்'மட்டும் தான் செய்த்து!

மீண்டும் அறிமுகமான பவர்ஃபுல் ஆன Realme போன்!

ஆனால் ரியல்மி நிறுவனமோ கடந்த மே மாதத்தில், தான் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போனின் புதிய "மிராக்கிள் பர்பிள்" கலர் ஆப்ஷனை (Miracle Purple Color Variant) இந்தியாவில் அறிமுகமே செய்துவிட்டது. புதிய கலரை தவிர்த்து ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய மிராக்கிள் பர்பிள் வேரியன்ட் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.32,999 என்றும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஃப்ளூயிட் சில்வர் மற்றும் ரேஸர் கிரீன் கலர் ஆப்ஷன்களில் இருந்து வேறுபடுகிறது; இவ்விரு கலர் ஆப்ஷன்களும் 128ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கிறது.

விற்பனையை பொறுத்தவரை, புதிய மிராக்கிள் பர்பிள் வேரியண்ட் ஆனது ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஜூலை 20 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். இது அமேசான் இந்தியா போன்ற பிற தளங்களின் வழியாக விற்பனைக்கு வருமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரியல்மி ஜிடி 6டி-ன் புதிய மிராக்கிள் பர்பிள் கலர் உடன் சேர்த்து ரியல்மி பட்ஸ் ஏர் 6 (Realme Buds Air 6) மாடலும் கூட புதிய கலர் ஆப்ஷனை பெறவுள்ளது. இந்தியாவில் இது ஜூலை 15 முதல் வாங்க கிடைக்கும் என்பது போல் தெரிகிறது. என்ன கலர், என்ன விலை என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது கிளாஸ் போன்ற பினிஷ் கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அந்த நேரத்தில் இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 5 கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கடைசியாக இது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Miracle Purple Color Variant of Realme GT 6T Launched in India Check Price Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X