வாவ் சொல்ல வைக்கும் விலையில் புது OnePlus Nord 5G போன்! OLED டிஸ்பிளே, 100W சார்ஜிங், Alert Sliderனு அசத்துது!
இந்திய மொபைல் சந்தையானது, பட்ஜெட் விலையிலான புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் நிரம்பி வழிகிறது. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (Tecno Spark 20 Pro 5G) ஆகியவைகள் அறிமுகமாகி விட்டன. மேலும் மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) மற்றும் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) மாடல்களும் இந்த மாதமே இந்தியாவிற்கு வருகின்றன.
இந்த வரிசையில், ஒன்பிளஸ் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் வருகிற ஜூலை 16 ஆம் தேதியன்று அதன் நோர்ட் சீரீஸின் கீழ் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4) மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைப்பாட்டில்.. இதன் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன விலைக்கு அறிமுகமாகும்? எக்ஸ் தளம் வழியாக டெக் ஹோம் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இதன் பொருள், ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை சற்று அதிகமாக இருக்கலாம், அனேகமாக இது சுமார் ரூ.31,999 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற ஸ்டோரேஜ் வகைகளின் விலைகள் பற்றி எந்த விவரங்காகும் இல்லை. பெரும்பாலும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட சுமார் ரூ.3,000 அதிகமாகவே இருக்கும்.
என்னென்ன அம்சங்களை எதிரிபார்க்கலாம்? ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளேவை (1.5K OLED Tianma U8+ Display) கொண்டிருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்க்ரீன் சைஸ் பழைய ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலுடன் ஒற்றுப்போகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படும். இது பழைய ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலில் உள்ள டைமன்சிட்டி 9000 சிப்செட்டில் (Dimensity 9000 SoC) இருந்து ஒரு நல்ல அப்கிரேட் ஆகும். இந்த சிப்செட் குறைந்தபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலில் 50எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் கேமரா சென்சார்களுடன் வந்தது. ஆனால் நோர்ட் 4 மாடலில் 3வது சென்சார் இடம்பெறாது என்பது போல் தெரிகிறது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டு இருக்கும். ஒப்பிடுகையில் இது நல்ல அப்கிரேட் ஆகும். பழைய ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் போதிலும் அது 80W சார்ஜிங் ஸ்பீட் உடன் வருகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார், அலெர்ட் ஸ்லைடர், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








