Home
Mobile

OnePlus ஒரு முடிவோட தான் இருக்கு போல.. ஜூலை 16-ல் 2 சர்ப்ரைஸ்.. ஒன்னு Nord 4 அறிமுகம்.. இன்னொன்னு?

மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு புதிய 5ஜி போனை வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்களும், லேட்டஸ்ட் ஒன்பிளஸ் பிராண்ட் மாடல் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற யோசனையில் உள்ளவர்களும்.. ஜூலை 16 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால்.. ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஜூலை 16 ஆம் தேதி அன்று வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது. அதில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் ஆகும்!

இப்படியாக அனைவரின் கவனமும் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் மீது மட்டுமே இருக்கும் நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் நிறுவனம் இன்னொரு சுவாரசியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது "சன்செட் டூன்" என்கிற புதிய கலர் ஆப்ஷனை பெறவுள்ளதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

OnePlus ஒரு முடிவோட தான் இருக்கு போல.. ஜூலை 16-ல் 2 சர்ப்ரைஸ்!

ரோஸ் கோல்ட் கேமரா ஐலேண்ட்-ஐ காட்டும் ஒரு டீஸர் போட்டோ வழியாக.. ஒன்பிளஸ் 12ஆர்-ன் புதியசன்செட் டூன் கலர் ஆப்ஷனின் இந்திய வருகை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அடிப்படையில் ஒரு ரீபிராண்டட் வெர்ஷன் ஆகும். சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் அறிமுகமானது.

சீனாவில், ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது மிங்ஷா கோல்ட் (Mingsha Gold) எனப்படும் ரோஸ் கோல்ட் கலர் வேரியண்ட்டிலும் வாங்க கிடைக்கிறது. அதுதான் சன்செட் டூன் என்கிற பெயரின் கீழ் ஒன்பிளஸ் 12ஆர் மாடலுக்கு கொண்டு வரப்படவுள்ளது போல் தெரிகிறது. புதிய கலர் ஆப்ஷனை தவிர்த்து ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

இருப்பினும் இந்த புதிய கலர் ஆப்ஷனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இது ஜூலை 16 ஆம் தேதி நடக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் போது வெளியிடப்பட்டால்.. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும்? நம்பகமான டிப்ஸ்டர் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4-ன் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதன் பொருள், ஒன்பிளஸ் நோர்ட் 4-ன் அசல் விலை சற்று அதிகமாக (சுமார் ரூ.31,999) இருக்கலாம்!

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிரிபார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்பலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

ஜூலை 16 ஆம் தேதி நடக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "சம்மர் லான்ச்" நிகழ்வில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஸ்மார்ட்வாட்ச், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெ ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Sunset Dune Color Option For OnePlus 12R Launching Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X