லினோவா P780 மொபைல் ஒரு சிறப்பு பார்வை...!

Posted By:

இன்றுள்ள மொபைல் சந்தை போட்டியில் தினந்தோறும் பல மொபைல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன அதுவும் பல புதிய புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

அந்தவகையில் சென்ற மாதம் வெளிவந்து தற்போது சந்தையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது லினோவா P780 அப்படி என்னதான் இந்த மொபைலில் இருக்கிறது என்று இந்த மொபைலை கம்பெனியில் இருந்து வாங்கி 7 நாட்கள் பயன்படுத்தி பார்த்தோம்.

அதில் இந்த மொபைலில் பல வியக்கும் ஆப்ஷன்கள் இருப்பது நமக்கு தெரியவந்தது அப்படி மத்த மொபைல்ல இல்லாத ஆப்ஷன் அதுல மட்டும் அப்படி என்ன இருக்குதுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்க இதோ அந்த ஆப்ஷன்களை பார்போமா.

இந்த மொபைலின் தனித்துவம் என்று சொன்னால் அதில் இருக்கும் பேட்டரி தான் முதலில் நமக்கு தெரிகிறது, மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரி திறன் 2000mAh தான் ஆனால் இதில் இருப்பதோ 4000mAh உள்ளது இது உங்களது பேட்டரி பேக் அப்பை இருமடங்கு தருகிறது.

மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது.

இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது மேலும் கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய சைட் கிரிப்புடன் கிரிப்புடன் இருக்கிறது இந்த மொபைல்.

இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் இந்த எடை சற்று அதிகம் தான் ஆனால் மற்ற மொபைகளை ஒப்பிடுகையில் இதன் எடை சற்று குறைவே என்று கூறலாம். இதில் பென்டிரைவ் போட்டு கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களை செக் மற்றும் காப்பி செய்தும் கொள்ளலாம்.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம் உண்மையிலேயே இது புதுமையான ஆப்ஷனாக நமக்கு இருந்தது.

அத்தோடு இந்ச மொபைல் ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும் இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான படங்களை நாம் எடுக்கலாம்.

சரி இந்த மொபைலை நாம் பயன்படுத்திய அந்த ஒரு வார காலம் எப்படி இருந்தது என்பதை பார்ப்போமா....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதல் நாள்

#1

முதல் நாள் வழக்கம் போல தாங்க நாம் புது மொபைல் வாங்கினால் என்ன செய்வோமோ அதுதான் சிறிது நேரம் சிம் போடாமல் மொபைலை பார்த்து விட்டு பிறகு சிம் போட்டு சார்ஜ் போட்டு விட்டோம்... அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுல இருக்கற ஆப்ஷன்ஸ பாத்து கத்துக்கவே ஒரு நாள் காலிங்க..

இரண்டாம் நாள்

#2

பிறகு இரண்டாம் நாழும் வழக்கம் போல் தாங்க மொபைலை யூஸ் பண்ணுணோம் கூகுள், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்தையும் ஒரு ரவுன்ட் அடித்தோம் பிறகு போர் அடிக்கவே கேம் விளையாடி கொண்டே இருந்தோம் இப்படியே இரண்டாம் நாள் முடிஞ்சுதுங்க.

மூன்றாம் நாள்

#3

மூன்றாம் நாள் தான் 3G டேட்டா ஸ்பிடு எவ்வளவு கிடைக்கிறது என செக் செய்தோம் ம்ம்ம் அதுவும் ஓ.கே ங்க நன்றாக தான் இருந்தது. அங்கதாங்க ஒன்ன நோட் பண்ணிணோம் பேட்டரி இன்னும் தீரவே இல்லையே எவ்வளவு இருக்கிறது என்று செக் செய்யலாம்னு போனா 68 சதவிகிதம் மிச்சம் இருக்குங்க உண்மையில் பேட்டரி பேக் அப் அருமை தாங்க இதில் என்ன ஒன்னு பேட்டரி அதிக நேரம் தொடர்ச்சியா யூஸ் பண்ணுணா பேட்டரி சூடு அகிருதுங்க

நான்காம் நாள்

#4

அன்றைக்கும் வழக்கம் போல தாங்க சோஷியல் மீடியா மற்றும் கேமிங்ன்னு போச்சு நான்காம் நாள் இறுதியில் 28 சதவிதம் பேட்டரி இருந்துச்சுங்க. உண்மையிலேயே கொஞ்சம் ஆச்சர்யம் தாங்க இப்படி ஒரு பேட்டரி பேக் அப் வரும் மொபைலை இப்போது தான் முதன் முறையாக பயன்படுத்தி இருந்தோம் நாம்.

ஐந்தாம் நாள்

#5

ஐந்தாம் நாள் யூ டியூப்பில் சில வீடியோக்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம் அப்போ தாங்க பேட்டரி லோ காண்பித்தது மொபைல்... இப்பவாவது பேட்டரி லோ காண்பித்ததே என்று கூறி பேட்டரி சார்ஜ் போட்டோங்க ஐந்தாம் நாள்

ஆறாம் நாள்

#6

ஆறாவது நாளில் மொபைலை ஒரு சாதாரண மொபைல் போலவே பயன்படுத்தி பார்த்தோம் அதாவது நெட் மற்றும் கேம் எதுவும் விளையாட வில்லை மொபைலில் கால் வந்தால் அட்டென்ட் செய்தும் மெசேஜ் அனுப்பியும் செக் செய்து பார்த்தோம் நன்றாகவே இருந்தது.

ஏழாவது நாள்

#7

கடைசி நாளும் மொபைலை சாதாரணமாகவே பயன்படுத்தி பார்த்தோம் நன்றாகவே இயங்கியது அந்த நாளின் முடிவில் மொபைலில் இருந்தது 49 சதவிதம் மொபைல் பேட்டரி..

அந்த மொபைலில் நாம் அறிந்தது

#8

ஏழு நாட்கள் இந்த மொபைலை பயன்படுத்திய பின்னர் இந்த மொபைலில் நமக்கு மிகவும் பிடித்ததே பேட்டரி பேக் அப் தான் பிற ஆப்ஷன்கள் அனைத்தும் அடுத்து தான். அதற்கடுத்து நமக்கு பிடித்தது யூஸர் பிரண்ட்லி மொபைல் என்பது இதில் உள்ள ஆப்ஷன்கள் மிகவும் ஆழமாக கொடுக்கப்படவில்லை பேஸிக் லெவலில்தான் இருக்கிறது அதனால் மிகவும் எளிதாக இதை கையாளலாம்.

மொத்தத்தில் இந்த மொபைலை நிச்சயம் நாம் நம்பி வாங்கலாம் நண்பரே இதன் விலை ரூ.18,869. விலை மட்டும் கொஞ்சம் அதிகம்னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் புரியுதுங்க புரியுது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்