இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

சியாமி மி 6 மாடலின் விலையை குறைத்து இந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

By Siva
|

கடந்த 2016ஆம் ஆண்டு சியாமி நிறுவனம் வெளியிட்ட சியாமி மி 5 மாடல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 820 SoC பிராஸசரில் வெளியான உலகின் முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியாவிலும் இந்த பிராஸசரில் வெளியான முதல் மாடல் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

மேலும் சியாமி நிறுவனம் மி 5 மாடலில் மூன்று வகையான மாடல்களை வெளியிட்டது. ஆனால் இந்தியாவில் அந்த நிறுவனம் ஒரே ஒரு மாடலை மட்டுமே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 820 SoC பிராஸசரில் வெளிவந்த இந்த போன் ரூ.24999க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வகை பிராஸசரில் வெளியாகும் விலை குறைந்த போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒருசில மாதங்களில் lEeCo நிறுவனத்தின் Le Max 2 மாடல் இதைவிட குறைவாக அதாவது ரூ.22999க்கு இதே பிராஸசரில் விற்பனை ஆனது

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

இதேபோல் இந்த ஆண்டில் சியாமி நிறுவனம் வெளியிடவுள்ள சியாமி மி 6 ஸ்மார்ட்போனும் முதன்முதலில் ஒரு புதிய பிராஸசரை உலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த மாடல் இந்தியாவில் வெளிவருமா? என்ற சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 10 முதல் ஓப்போ எப் 1 ரோஸ் கோல்ட்.!

இதுகுறித்து இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஹூகோ பார்ரா என்பவர் கூறியபோது, இந்தியாவில் வருடத்திற்கு ஒரு புதிய வகை பிராஸசர் வகை போன்கள் மட்டுமே வெளியிடப்படும் என்ற வகையில் சியாமி மி 6 வகை மாடல் சீனாவில் மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிநவீன போன்களுக்கான வரவேற்பு குறைவாக உள்ளதே இதன் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

இவருடைய கூற்று இந்தியர் என்ற வகையில் நம் மனதை பாதித்தாலும் அவர் கூறியதை போல சியாமி மி 5 மாடல் இந்தியாவில் குறைவாகவே விற்பனை ஆனதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் தான் இந்தியாவில் வருடத்திற்கு ஒரு மாடல் மட்டுமே வெளியிட சியாமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

ஆனால் அதே நேரத்தில் சியாமி மி 5 விற்பனைக்கு வந்த ஒருசில மாதங்களில் அதே சாரம்சங்களுடன் கூடிய ஒன்ப்ளஸ் 3 மாடல் இந்தியாவில் வெளியானது. இந்த போன் எதிர்பார்த்ததைவிட மிக அதிகளவு வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இதே நிறுவனம் கடந்த மாதம் இதன் அப்கிரேட் மாடல் ஒன்றையும் வெளியிட்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

அப்படியெனில் சியாமி மி 5 மாடல் விற்பனை குறைவாக இருக்க என்ன காரணம்? விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலை விட அதிநவீன டெக்னாலஜி உள்ள ஒன் ப்ளஸ் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி S7 மாடல் இதைவிட விலை குறைவானது என்பதுதான் காரணமாக இருக்க முடியும்

பொதுவாக ரெட்மியிடம் இந்தியர்கள் எதிர்பார்ப்பது விலை மலிவு மற்றும் டெக்னாலஜி அதிகம். இதனால்தான் அந்நிறுவனத்தின் சியாமி நோட் 3 மிக அதிகமான வரவேற்பை பெற்று எட்டே மாதங்களில் 2.5 மில்லியன் போன் விற்பனை ஆனது.

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

சியாமி மி 3, ரெட்மி 1S ஆகிய மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து இந்தியாவில் சியாமி என்றால் பட்ஜெட் விலையில் நல்ல போன் தரும் நிறுவனம் என்ற பெயரை எடுத்துவிட்டது. ஆனால் சியாமி நிறுவனம் திடீரென மி 3, ரெட்மி 1S மாடலை திடீரென நிறுத்திவிட்டனர்.

அதற்கு பதிலாக சியாமி மி 5 மாடலை வெளியிட்டனர். ஆனால் இந்த மாடல் முந்தைய மாடல்கள் போல் வரவேற்பை பெறவில்லை. எனவே இந்தியாவில் மி 6 மாடல் வருவது சந்தேகம் என்று கூறப்பட்டாலும் இந்த மாடல் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த மாடல் ஸ்னாப்டிராகன் SoC பிராஸசர், 6 GB ரேம், டூயல் கேமிரா, டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே உள்பட பல வசதிகள் உள்ளது. ஆனால் இந்தியர்களுக்கு இந்த போன் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஒருவேளை இந்தியாவில் இந்த போன் வெளிவந்தால் அதன் விலை ரூ.29999 ஆக இருக்கும். ஆனால் இந்தியர்கள் சீன போன் ஒன்றுக்கு முப்பதாயிரம் வரை விலை கொடுப்பார்களா? என்பது சந்தேகம்தான்

சியாமி மி 6 போனின் தரம் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தியாவில் சியாமி நிறுவனத்தின் போனுக்கு ரூ.20000க்கு மேல் கொடுக்க இந்தியர்கள் தயங்குவார்கள் என்பதுதான் உண்மை நிலவரம்.

சியாமி நிறுவனம் தொடர்ந்து ரூ.10000 ரேஞ்சில் உள்ள மாடல்களை மட்டுமே இந்தியாவில் பெரும் வரவேற்புடன் விற்பனை செய்ய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே சியாமி மி 6 மாடலின் விலையை குறைத்து இந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi's upcoming flagship smartphone, the Xiaomi Mi 6 is expected to be a heavy specced affordable phone, but will people choose it over others?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X