5 எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ரூ.7,699 தாங்க, நீங்க வாங்கிட்டீங்களா?

Written By:

லாவா நிறுவனம் புதிய ஐரிஸ் செல்பீ50 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ரூ.7,699 க்கு கிடைக்கின்றது, நீல நிறம் மட்டும் ரூ.7,899க்கு விற்ப்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

5 எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ரூ.7,699 தாங்க..!

புதிய லாவா ஐரிஸ் செல்பீ50, 5 இன்ச் 854*480 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிஎம் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது. 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு 2400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகிறது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

கேமராவை பொருத்த வரை ஐரிஸ் செல்பீ50 ஆட்டோபோகஸ் மற்றும் டூயல் எல்ஈடி ப்ளாஷ் வசதி கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் 3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Iris Selfie 50 smartphone at Rs 7,699 launched in India. Check out the specifications and availability of the new selfie smartphone in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot