Home
Mobile

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 காம்பாக்ட் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்தது என்பதற்கான 10 காரணங்கள்

By Meganathan

சோனி எக்ஸ்பீரியா பற்றி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை, இவை சந்தையில் நீம்ட காலமாகவே பிரபலமாக இருக்கிறது அனைவரும் அறிந்ததோடு மற்ற ஸ்மார்ட்போன்களை விட சோனி தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது.

புதிய சோனி எக்ஸ்பீரியா இசட் 3 காம்பாக்ட் பற்றி கூற வேண்டுமென்றால் இது எக்ஸ்பீரியா இசட் 3 யின் அடுத்த மாடல், வடிவமைப்பை பொருத்த வரை பெயரே காம்பேக்ட் என்பதால் பழைய மாடலை விட மெலிதாகவும் சிறியதாகவும் இருக்கின்றது.

தற்சமயம் ரூ.41,990 க்கு கிடைக்கும் எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் 4.6 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் ட்ரைலூமினஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் அட்ரினோ 330 ஜிபியு கொண்டுள்ளதோடு 2 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

எக்ஸ்பீரியா இசட் 3 கம்பாக்ட் 4கே வீடியோ பதிவு செய்யும் 20.7 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 1080பி வீடியோ பதிவு செய்யும் 2.2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மற்றவைகளை விட சிறந்தது என்பது விளக்கும் 10 காரணங்களை தான் அடுத்து வரும் ஸ்லைடரில் பார்க்க போறீங்க

1

1

இது மெலிதாக, எடை குறைவாகவும் ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கு வேண்டிய அனைத்து அம்சங்களுடனும் இந்த புதிய எக்ஸ்பீரியா காட்சியளிக்கின்றது. மேலும் இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை பழைய எக்ஸ்பீரியா இசட் 3யின் நிழல் போன்று தான் இது தோன்றுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களின் மினி மாடல்களில் விலை அதிகமாக இருந்தாலும் விலைக்கேற்ற அம்சங்களை எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் கொடுக்கின்றது.

2

2

பயன்படுத்த கச்சிதமாக இருந்தாலும் இதன் ஆம்னிபேலன்ஸ் வடிவமைப்பு அனைத்து வித பயன்பாடுகளிலும் இடையூறு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் 6 உடன் ஒப்பிடும் போது எக்ஸ்பீரியா இசட் 3 காம்பாக்ட் பயன்படுத்த எளிதாகவும் அற்புதமாகவும் உள்ளது. மேலும் இருபுறமும் கண்னாடி மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த போனை மேலும் அழகாக காட்டுகிறது.

3

3

சோனி ஸ்மார்ட்போன்கள் வாட்டர்ப்ரூப் போன்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் நிலையில் அதன் இன்னும் ஒரு இனைப்பு தான் எக்ஸ்பீரியா இசட் 3 காம்பாக்ட். அந்த வகையில் இதுவரை ஆப்பிளில் இருந்து எந்த வாட்டர்ப்ரூப் ஸ்மார்ட்போனும் வெளியாகவில்லை என்பதோடு ஐபோன்களில் வாட்டர்ப்ரூப் வசதி பெற தனியாக அதற்கென கேஸ் ஒன்றை வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4

4

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலை அடுத்து அதன் காம்பக்ட் மாடலை வெளியிட்டுள்ளதால் அதன் சிறப்பம்சங்கள் ஒன்றும் குறைக்கப்படவில்லை, எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் அட்ரீனோ 330 ஜிபியு கொண்டுள்ளது, மேலும் இதில் 3 ஜிபி ராமும் உள்ளதோடு ஐபோன் 6 மாடலில் ஆப்பிள் 1 ஜிபி ராம் மட்டும் தான் கொடுத்துள்ளது.

5

5

சோனியை பொருத்தவரை ஸ்மார்ட்போன் வியாபாரம் என்பது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது தான், சோனி டிவி மற்றும் கேமராக்கள் ஏற்கனவே சந்தையை ஆட்டிப்படைக்கும் நிலையில் ஸ்மார்ட்போன் சந்தையையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் டிஸ்ப்ளே நீங்கள் கற்பனையிலும் நினைக்காத அளவு இருக்கின்றது. இது சோனி ப்ரேவியா டிவிக்களில் இருக்கும் ட்ரைலூமினஸ் மற்றும் லைவ் கலர் எல்ஈடி கொண்டு தெளிவான டிஸ்ப்ளேவை எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் கொடுக்கின்றது.

6

6

தற்சமயம் ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலமாகி வரும் சீம்லெஸ் கனெக்ஷன் வசதி சோனியும் வழங்குகிறது. சோனி ஸ்மார்ட்போன் மூலம் ஸ்மார்டவாட்சை கனெக்ட் செய்ய முடியும், இது எல்லா ஸ்மார்ட்போன்களிலும் சாத்தியம் என்றாலும் எக்ஸ்பீரியா இசட்3 காப்மாக்ட் மூலம் ப்ளே ஸ்டேஷன் 4 விளையாட முடியும், இது தான் சோனியின் தனிச்சிறப்பு.

7

7

கேமராவை பொருத்த வரை 20.7 எம்பி எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் மற்றும் 25 எம்எம் ஜி லென்ஸ் மற்றும் 12800 ஐஎஸ்ஓ செட்டிங்ஸ் இதில் உள்ளது. மற்ற ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை விட சிறந்த கேமரா எக்ஸ்பீரியா இசட்3யில் உள்ளது. புதிய ஆப்பிள் ஐபோன் 6 8 எம்பி சென்சார் மட்டுமே உள்ளது, இருந்தும் எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் அளவு துள்ளியமான படங்களை ஐபோன் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்

8

8

சோனியின் பேட்டரியை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்துக்கும் அதிகமாக பேக்கப் அளிக்கும் என்பதோடு இது பேட்டரி சேவர் மோடு பயன்படுத்தாமல் குறிக்கப்பட்ட கனக்கு என்பதும் கூடுதல் தகவல். புதிய ஐபோன் 6 பேட்டரி ரீ-டன் செய்யப்பட்டிருந்தாலும் எக்ஸ்பீரியா இசட்3யுடன் ஒப்பிட முடியாது என்று தான் கூற வேண்டும்

9

9

சோனி மொபைல்களை பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் சோனி போன்ற மொபைல் பயன்பாடு வேறு எந்த மொபைலும் அளிக்காது என்று தான் கூறுவார்கள். எக்ஸ்பீரியா இசட்3 யை பொருத்தவரை இது ஆன்டிராய்டு 4.4 சோனியின் கஸ்டம் யூசர்பேஸ் மூலம் இயங்குகிறது. இதோடு இது ஸ்னாப்டிராகன் 801 சிபியு கொண்டுள்ளது, இது சந்தையில் தற்சமயம் இருக்கும் சிபியுக்களில் சிறந்தது என்றே கூறலாம்.

10

10

எக்ஸ்பீரியா விரும்பிகளுக்கான இந்த தளம் சோனி ஸ்மார்ட்போன்களில் அனைவராலும் விரும்பப்படுகின்றது. சோனி சேவைகளில் சிறந்தவையாக சோனி என்டர்டெயின்மென்ட் விளங்குவதோடு எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட் வைபை மூலம் ப்ளே ஸ்டேஷன் 4ல் இனைத்து விளையாடவும் முடியும்.

Best Mobiles in India

English summary
Hard-Hitting Reasons Why Sony Xperia Z3 Compact is the Best. check out the full specs and main abilities that xperia z3 is offering you.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X