7000mAh லித்தீயம் பேட்டரியுடன் ஜியோனி நிறுவனத்தின் M2017 அறிமுகம்.

லித்தியம்-அயன் கொண்ட பேட்டரி உள்ள ஜியோனி நிறுவனத்தின் M2017 அறிமுகம்.

By Siva
|

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி (Gionee) சமீபத்தில் இவ்வருட இறுதியில் தனது அடுத்த M சீரீஸ் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாக உறுதி அளித்தது.

7000mAh லித்தீயம் பேட்டரியுடன் ஜியோனி நிறுவனத்தின் M2017 அறிமுகம்.

இதன்படி தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் வெலியாகியுள்ளது. லித்தியம்-அயன் கொண்ட இந்த பேட்டரி 7000aAh பவர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

7000aAh பவர் அமைந்த பேட்டரியுடன் கூடிய இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் மிக அபாரமான பவர் மேனேஜ்மெண்ட் அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறைந்த அளவு பவரை மட்டுமே எடுத்து கொள்கிறது. எனவே நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதம் என்றே கருதப்படுகிறது.

இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 25 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கலாம். அதாவது தொடர்ச்சியாக எட்டு திரைப்படங்கள் இந்த ஸ்மார்ட்போனில் பார்க்க்கும் வகையில் இதன் சார்ஜ் நிலைத்து இருக்கும். அதே நேரத்தில் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் 915.42 மணி நேரம் சார்ஜ் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

மேலும் இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் குவாட் HD அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளேயை கொண்டது. கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய போனாக இருக்கும் இந்த போனில் 24W குவால்கோம் க்விக் சார்ஜ் 3.0 உள்ளது. இதனால் மிக வேகமாக சார்ஜ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 SoC பிராஸசர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 6.0 தன்மையை கொண்டது. மெட்டல் பிரேம் மற்றும் பின்பக்கம் லெதர் அமைப்பை கொண்ட இந்த போன் கோல்ட் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது.

மேலும் இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் இன்னொரு சிறப்பு இதன் பின்பக்கத்தில் இரண்டு கேமிராக்கள் அமைந்துள்ளது. 12MP மற்றும் 13MP திறன் கொண்ட இந்த இரண்டு கேமிராக்களும் ஆப்டிக்கல் ஜூம் வசதியை கொண்டது.

மேலும் 8MP செல்பி கேமிராவும் இதில் உள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியை கொண்ட இந்த ஜியோனி M2017 ஸ்மார்ட்போன் ரூ.68,240 விலையில் கிடைக்கும். மேலும் இந்த மாடலின் இன்னொரு வெர்ஷன் ரூ.1,65,740க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Source

Best Mobiles in India

Read more about:
English summary
Gionee M2017 launches with dual rear camera. Check out the specifications here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X