2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

மாதம் முழுக்க, ஆண்ட்ராய்டு கருவியா அல்லது ஐபோன் கருவியா என்று போட்டிகள் ன் நடக்க ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஆண்டு இறுதியில் தான் எது சிறந்த ஸ்மார்ட்போன் என்ற போட்டி நடக்கும். அப்படியான ஒரு போட்டிதான் இது.!

2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் இந்தவேளையில் 2016-ல் சந்தையை கலக்கிய மக்களின் மனதில் பூரணத்தை ஏற்ப்படுத்திய சிறந்த போன்களை ஒருமுறை பட்டியலிட வேண்டியது அவசியமாகிறது. வடிவமைப்பு தொடங்கி அம்சங்கள் விலை என அனைத்திலும் கலக்கிய இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன் கருவிகள், இரண்டு சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் இரண்டு கெளரவ கருவிகள் இதோ உங்களுக்காக.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - முதலிடம்.!

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - முதலிடம்.!

ஐபோன்7 ப்ளஸ் : நீங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நம்பகமான தலைமை சாதனம் தேடுகிறீர்கள் என்றால் ஐபோன் 7 பிளஸ் தான் சிறந்த தேர்வாகும். தண்ணீர் மற்றும் தூசி-எதிர்ப்பு வடிவமைப்பு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, வைட் ஆங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ், 2Xஆப்டிகல் ஜூம் மற்றும் 10xடிஜிட்டல் ஜூம் என ஒரு அட்டகாசமான கருவியாக இது திகழ்கிற

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.!

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் : எந்தவொரு கருவியுடனும் ஒப்பிட இயலாத வண்ணம் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளேவில் கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு, கொண்ட ஒரு பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன் தான் - கேலக்ஸி எஸ்7 எட்ஜ். பேட்டரி திறன், கேமிரா துறை, விலை என அனைத்திலும் எடைக்கு எடை இக்கருவிக்கு இக்கருவியே சமம்.

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - முதலிடம்.!

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - முதலிடம்.!

கூகுள் பிக்சல் : இந்த ஆண்டு, கூகுள் அதன் சொந்த பிக்சல் தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் என அதன் இரண்டு பிரீமியம் கருவிகளை 2016 அக்டோபர் மாதம் வெளியிட்டது. ஆப்பிள் கருவிகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இக்கருவிதான் 2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.!

2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.!

ஒன்ப்ளஸ் 3 : கேமிரா, ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள் என இந்த ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான தலைமை கருவியாகவே வெளியானது ஆக, 2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான இரண்டாம் இடம் - ஒன்ப்ளஸ் 3 கருவிக்கே.!

கெளரவ கருவி #01

கெளரவ கருவி #01

மோட்டோ இசெட் : மெலிந்த வடிவமைப்பு, கூடுதல் தொகுதிகள், கூடுதல் பேட்டரி, ஹாசெல்ப்ளாட் ஜூம் லென்ஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ் என பல புதிய புதுமையான அம்சங்கள் கொண்ட இக்கருவி 2016-ஆம் கெளரவ கருவியில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.

கெளரவ கருவி #02

கெளரவ கருவி #02

நுபியா 11 : 2016-ஆம் ஆண்டின் மிகவும் ஸ்டைலான போன்களில் இதுவும் ஒன்று. உளிச்சாயுமோரம் வடிவமைப்பு, நல்ல செயல்திறன் மற்றும் அற்புதமான கேமிரா துறை ஆகியவைகளை கொண்ட இக்கருவியும் 2016-ஆம் கெளரவ கருவியில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ன் 'பிக்கஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்' எதிர்பார்ப்பு பட்டியல் .!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Smartphones that totally won 2016. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot