இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

Written By:

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செல்போன் என்றாலே நோக்கியாதான் என்று இருந்தது. நோக்கியாவின் ஆரம்பகால மாடல் முதல் நவீன மாடல்கள் வரை வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஆனால் சாம்சங், உள்பட பல நிறுவனங்கள் நோக்கியாவை பின்னுக்கு தள்ளியது.

இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

இந்நிலையில் மீண்டும் நோக்கியா தனது பழைய இடத்தை பிடிக்க முடிவு செய்து தற்போது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இரண்டு புதிய மாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1 ஆகிய பெயர்களில் உருவாகி வரும் புதிய மாடல் ஆண்ட்ராய்டு போன் அடுத்து ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் லைஃப் எப்1எஸ் பிரத்தியேகமாக ரூ.10,999/-க்கு.!

இந்நிலையில் சீன இணையதளம் ஒன்றி நோக்கியாவின் புதிய மாடல்கள் குறித்த ஒருசில விபரங்களும் அந்த மாடல்களின் ஸ்கெட்சும் வெளிவந்துள்ளது. இந்த இரு மாடல் ஆண்ட்ராய்டு போன்களும் எப்படி இருக்கலாம் என்ற ஊகங்களை தற்போது பார்ப்போம்

இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

நோக்கியா E1: நோக்கியா E1 மாடல் போனின் முன்பக்கத்தில் மிகவும் சென்சிட்டிவ் கீ பட்டன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு மாடல்களிலுமே LED பிளாஷ்லைட் உடன் கூடிய டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு மாடல்களுமே அதிக நவீன வசதிகளுடன் இருப்பதால் இதன் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உடனடியாக பேடிஎம் க்யூஆர் குறியீடு உருவாக்குவது எப்படி.?

நோக்கியா D1: நோக்கியா D1 மாடல் ஸ்மார்ட்போன் தற்போது வெளிவரும் மாடல்களுடன் ஒப்பிடும்போது எடை மற்றும் டிஸ்ப்ளே சைஸ் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்று சீன இணையதளம் கூறுகிறது. குறிப்பாக ஆச்சரியத்தக்க வகையில் டிஸ்ப்ளே இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் போனின் வலது புறத்தில் தான் இரண்டு மாடல்களிலும் இருக்க உள்ளதாம்.

இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

மேற்கண்ட தகவல்கள் வெளிவந்ததில் இருந்து நோக்கியா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் கம்பீரமாக பழைய ஃபார்முக்கு வரவுள்ளது என்பது உறுதியாகிறது. குறிப்பாக இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க இந்தியர்கள் விரும்பும் வகையில்தான் இந்த இரண்டு மாடல்களுமே தயாரிக்கப்பட்டு வருகிறதாம். இன்னும் இந்தியாவில் நோக்கியா மாடலுக்கு என ரசிகர்கள் இருந்து வருவதால் கண்டிப்பாக புதியதாக வெளிவரவுள்ள மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

SOURCERead more about:
English summary
Nokia E1 and Nokia D1 sketched images leaked online.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot