கார்போன் நிறுவனத்தின் 4 புதிய 4G ஸ்மார்ட்போன்கள்

Written By:

இந்தியாவில் சமீபத்தில் ஜியோ அறிமுகம் ஆனதில் இருந்து 4ஜி மொபைல் போனின் விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே நடுத்தர வர்க்கத்தினர்களும், 4ஜி மொபைல் போன்களை வாங்கும் அளவுக்கு குறைந்த விலையில் 4ஜி மொபைல் போன்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அந்த வகையில் கார்போன் நிறுவனம் நான்கு புதிய வகை 4ஜி மொபைல் போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

கார்போன் நிறுவனத்தின் 4 புதிய 4G ஸ்மார்ட்போன்கள்

ஆரோ நோட் 4G, K9 ஸ்மார்ட் 4G, டைட்டானியம் விஸ்டா 4G, மற்றும் விராத் 4G. மேற்கண்ட நான்கு மாடல்களும் தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நான்கு வகை 4G ஸ்மார்ட்போன்களும் நடுத்தர வர்க்கத்தினர் எளிதில் வாங்கும் விலையில் அதாவது ரூ.6500க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

ஆரோ நோட் 4G ஸ்மார்ட்போனின் விலை ரூ.6490, K9 ஸ்மார்ட் 4G ஸ்மார்ட்போனின் விலை ரூ5090, டைட்டானியம் விஸ்டா 4G ஸ்மார்ட்போனின் விலை ரூ5790, மற்றும் விராத் 4G ஸ்மார்ட்போனின் விலை ரூ 5790 என்பது குறிப்பிடத்தக்கது.

கார்போன் ஆரோ நோட் 4G: கார்போன் நிறுவனத்தின் முதல் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள போன். 5.5 இன்ச் டி?ஸ்ப்ளே, 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 சிப்செட், மற்றும் 5MP செல்பி கேமிரா, 8 MP பின் கேமிரா இந்த மாடலில் உள்ளது. மேலும் 2800mAh பேட்டரியுடன் 2GB ரேம் மற்றும் 16 GB இண்டர்னல் மெமரியும் உள்ளது.

இணையத்தில் லீக் ஆன நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்கள்

கார்போன் K9 ஸ்மார்ட் 4G: 5 இன்ச் டிஸ்ப்ளே, இண்டஸ் ஓஎஸ், 1.2 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர், 1GB ரேம், 2300mAh பேட்டரியில் கருப்பு மற்றும் க்ரே கலர்களில் கிடைக்கின்றது.

கார்போன் டைட்டானியம் விஸ்டா 4G: 1.25 GHz குவாட்கோ மெடியாடெக் MT6737 பிராஸசர், 1GB ரேம், 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 5 MP செல்பி கேமிரா, 8MP பின் கேமிரா ஆகியவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

கார்போன் விராத் 4G: டைட்டானியம் விஸ்டா மாடலின் அதே அம்சங்களை கொண்டுள்ள இந்த மாடலில் 2,800 mAh உள்ளது என்பது மட்டும் சிறப்பு. மேலும் இந்த மாடலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்Read more about:
English summary
Four new 4G VoLTE enable smartphones launched in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot