OLED டிஸ்ப்ளே உள்பட பல புதிய வசதிகளுடன் வெளிவரும் ஆப்பிள் ஐபோன் 8

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு வெளிவருகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள ஐபோன் பயனாளர்களிடம் பரபரப்பு தொற்றி கொள்ளும். அந்த அளவுக்கு ஆப்பிளின் தயாரிப்புகளுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது.

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு வெளிவருகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள ஐபோன் பயனாளர்களிடம் பரபரப்பு தொற்றி கொள்ளும். அந்த அளவுக்கு ஆப்பிளின் தயாரிப்புகளுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது.

OLED டிஸ்ப்ளே உள்பட பல புதிய வசதிகளுடன் வெளிவரும் ஆப்பிள் ஐபோன் 8

கடந்த செப்டம்பரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த் ஆப்பிள் ஐபோன் 7, நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அதற்கு முந்தைய மாடலை விட பெரிய வித்தியாசத்தில் இந்த போன் இல்லை என்ற குறை பயனாளர்களிடையே இருந்தது.

எதிரிகளுக்கு 'நோ ரெஸ்ட்' சொல்லும் 'நெக்ஸ்ட்' நோக்கியா இது தான்.!?

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஆப்பிள் ஐபோன் 8 மாடல் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தியை பார்க்கும்போது அடுத்த ஜெனரேஷன் மக்களுக்காகவே ஆப்பிள் ஐபோன் 8 தயாராகி வருவதாக கூறப்படுகிறது. டிசைன், கேமிரா, டிஸ்ப்ளே மற்றும் பல அம்சங்களில் முன்பு வெளிவந்த மாடல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் வெறும் ரூ.148/-க்கு பெறுவது எப்படி.?

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஆப்பிள் ஐபோன் 8 குறித்து இப்போதே பேசுவது பொருந்தாததாக இருப்பினும் இதுவரை இந்த மாடல் குறித்து வெளிவந்துள்ள செய்திகள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் இந்த ஆப்பிள் ஐபோன் 8 எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்தை பார்ப்போம்

OLED டிஸ்ப்ளே

OLED டிஸ்ப்ளே

இதுவரை வெளிவந்த ஆப்பிள் தயாரிப்புகளில் LED டிஸ்ப்ளே மட்டுமே இருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் OLED டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் கேட்கும் OLED டிஸ்ப்ளேக்களை டிஸ்ப்ளே தயாரிக்கும் நிறுவனங்களால் சப்ளை செய்ய முடியுமா? என்பதும் சந்தேகமாக உள்ளது.

ஐபோன் 8 மாடலின் ஸ்க்ரீன் அளவு என்ன?

ஐபோன் 8 மாடலின் ஸ்க்ரீன் அளவு என்ன?

ஐபோன் 8 மாடலின் ஸ்க்ரீன் சைஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இரண்டு வகையில் ஐபோன் 8 மாடலில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், OLED டிஸ்ப்ளேவுடன் கூடிய மாடலின் ஸ்க்ரீன் 5.8 இன்ச் இருக்கலாம் என்றும், இந்த டிஸ்ப்ளே இல்லாமல் வெளிவரும் மாடல் 4.7 அல்லது 5.4 இன்ச் அளவில் டிஸ்ப்ளே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிராவில் என்ன புதுமை?

கேமிராவில் என்ன புதுமை?

ஆப்பிள் ஐபோன் 7 மாடலில் கேமிராவின் தரம் சூப்பராக இருப்பதாக பாராட்டப்பட்ட போதிலும், அடுத்த ஆண்டு வரும் ஐபோன் 8 மாடலில் இன்னும் கேமிராவின் தரத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த மாடலில் உள்ள இரண்டு கேமிராவில் ஒன்று மட்டுமே ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலேஷன் வசதி இருந்த நிலையில் வரும் ஐபோன் 8 மாடலில் இரண்டு கேமிராவிலும் இந்த வசதி இருக்குமாம்

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜர்

சார்ஜர் விஷயத்தில் ஆப்பிள் ஐபோன் 8 அடுத்த நிலைக்கு செல்லவுள்ளது. ஆம் இதில் வயர்லெஸ் சார்ஜர்தான் உபயோகப்படுத்தப்படும். கிட்டத்தட்ட 15 அடிகள் தொலைவில் இருந்தே வயர்லெஸ் சார்ஜர் மூலம் வரும் ஐபோன் 8 மாடலில் பயன்படுத்தலாம்

ரிலீஸ் எப்போது?

ரிலீஸ் எப்போது?

அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது 10வது ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருப்பதால் அந்த விழாவின்போது அதாவது 2017ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple might release the new iPhone 8 on their 10th Anniversary next year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X