எதிரிகளுக்கு 'நோ ரெஸ்ட்' சொல்லும் 'நெக்ஸ்ட்' நோக்கியா இது தான்.!?
எதிர்வரும் நோக்கியா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது 5.2 அல்லது 5.5 அங்குல குவாட் எச்டி டிஸ்ப்ளே, கார்ல் ஜெய்ஸ் கேமிரா ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் எப்படியோ, நாங்கள் தோற்று விட்டோம்" என்று நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கூறிய வார்த்தைகளை எந்தவொரு நோக்கியா கருவி பிரியர்களும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
பிற நிறுவனங்களின் பெருவாரியான ஸ்மார்ட்போன்களின் வரவு நோக்கியாவை மெல்ல மெல்ல நசுக்கியது. "நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்" போன்ற புத்தம் புதிய நிறுவனம் கூட நோக்கியாவை பின்தள்ளியதற்கு நவீனத்துவமும், வாடிக்கையாளர்களாகிய நாமும் தான் காரணம்.
அதேசமயம், தற்காலத்திற்கு ஏற்ற வண்ணம் மீண்டும், நோக்கியா அதிநவீன ஸ்மார்ட்போன் வரிசையில் அட்டகாசமாய் வெளியானால் அதை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தான் நம்மில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் வாசிகள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

நோக்கியா ஆண்ட ராய்டு லீக் தகவல்கள்
நாம் எப்படி நோக்கியாவை முழுமையாக நம்புகிறோமோ அதே போல நோக்கியாவும் நம்மை நம்பி அதன் ஆண்டராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட மிகத் தீவிரமாய் பணியாற்றி வருகிறது. அதன் வெளிப்பாடு தான் அவ்வப்போது வெளியாகும் நோக்கியா ஆண்ட ராய்டு லீக் தகவல்கள். இந்த லீக் தகவல்கள் பழைய நோக்கியா வாசிகளின் ஆர்வத்தை தூண்டும் அதே சமயம், நோக்கியாவின் மறுஅவதாராத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு பீதியையும் சேர்த்தே கிளப்பி கொண்டிருக்கிறது.

5.2 மற்றும் 5.5-இன்ச்
அப்படியாக சமீபத்தில் வெளியான நோக்கியா ஆண்டராய்டு லீக் தகவலில் அதன் அம்சங்கள் சார்ந்த தகவல்களும் புலப்படுகின்றன. குறிப்பாக, வெளியாகப்போகும் அடுத்த நோக்கியா ஆண்டராய்டு பிளாக்ஷிப் கருவியில் 5.2 மற்றும் 5.5-இன்ச் ஸ்க்ரீன் அளவுகள் க்வாட் எச்டி ரெசெல்யூஷன் உடன் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த இரண்டு வகையான டிஸ்ப்ளேபிவில் இதில் 2கே டிஸ்ப்ளே உள்ளடக்கம் என்பதில் தெளிவில்லை.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821
உடன் நோக்கியா புதிய கருவிகளில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 இடம்பெறும் என்று கூறப்படுகிறது, ஆனால் 2017 ஆம் ஆண்டு வாக்கில் அந்த செயலி மிகவும் பழையதாக இருக்கும் என்பதால் அதில் ஸ்னாப்டிராகன் 835 பொருத்தப்படலாம்.

கார்ல் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ்
மிகவும் பிரபலமான கார்ல் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் இக்கருவியின் கேமிராவில் இடம்பெறும் என்றும் 2017-ஆம் ஆண்டில் வெளியாகும் இக்கருவியில் ஆண்டராய்டு 7.0 நௌவ்கட் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெட்டல் பாடி
அத்துடன் ஐபி67 சான்றிதழ் பெற்ற வாட்டர்ப்ரூப் ப்ரூப் பாடி மற்றும் தனித்துவமான மெட்டல் பாடியம் கொண்டிருக்கும் என்கிறது லீக் தகவல்கள். இந்த குறிப்பிட்ட கசிவு தகவல்கள் அறியப்படாத ஒரு மூலத்தில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!


Click it and Unblock the Notifications