லுமியா-920 மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஓர் சிறிய ஒப்பீடு!

By Super
|

லுமியா-920 மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஓர் சிறிய ஒப்பீடு!
ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கு நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியாக இருப்பதாக தகவல்கள் அடுத்து அடுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அந்த வகையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன், நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் பற்றி ஒரு சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

4 இஞ்ச் திரை கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் திரையினை விடவும், நோக்கியா லுமியா ஸ்மார்ட்போனின் திரை சற்று பெரியதாக இருக்கிறது. இதில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனில் 4.5 இஞ்ச் திரை வசதியில் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இதன் திரை அளவு பெரியதாக இருப்பினும், இதன் துல்லியம் அதிகமானதாக இல்லை என்று கூறலாம். அந்த வகையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் சிறந்த திரை துல்லியத்தினை பெறலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் எம்எஸ்எம்8960 ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஏ-6 பிராசஸரை வழங்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஒரு பக்கம் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் புதிய தொழில் நுட்ப வசதிகளை வழங்குகிறதென்றால், விண்டோஸ்-8 இயங்குதளத்தில் புதிய வசதிகளை வழங்குகிறது நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன்.

8 மெகா பிக்ஸலில் ஐசைட் கேமராவினை ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பெற முடியும் என்றால், லுமியா-920 ஸ்மார்ட்போனில் ப்யூர்வியூ தொழில் நுட்பம் கொண்ட 8.7 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும்.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் செகன்டரி கேமராவினை பயன்படுத்த முடியும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும், லுமியா-920 ஸ்மார்ட்போன் 1.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் அளிக்கும்.

நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும் என்றால், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மெமரி வெர்ஷன்களை கொடுக்கும்.

ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பேட்டரி 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். ஆனால் லுமியா-920 ஸ்மார்ட்போனில் 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய ஒப்பீட்டினை கூடிய விரைவில் பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X