ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு

By Super
|

ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு
ஸ்மார்ட்பேன் உலகில் முதன்மை இடத்தில் வகித்து வரும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களாகிய இரண்டுமே சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கி வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக 2 மாதங்களிலேயே 10 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விற்பனை எப்படியிருக்கும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. இந்த கேள்விக்கு பதில் வேண்டுமானால் இதன் விற்பனையின் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கும் முன்பு ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனின் ஒப்பீட்டையும் பார்க்கலாம்.

ஏ-6 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியை வழங்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில், ஐபோனைவிடவும் அகன்ற திரை வசதியினையும், 1136 X 640 திரை துல்லியத்தினையும் பெற முடியும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் திரையின் மூலம் பிரம்மாண்டமான திரையினை பயன்படுத்தலாம். இதன் திரை துல்லியம் 1280 X 720 பிக்ஸல் இருக்கும்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் வசதயினை கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஏ-6 சிப்செட் பொருத்தப்பட்டதாக இருக்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாகவும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்கும்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் ஆப்பிள் மேப்ஸ், மேம்படுத்தப்பட்ட சிரி அப்ளிக்கேஷன், புதிய சஃபாரி அப்ளிக்கேஷன், ஐக்ளவுடு ஸ்டோரேஜ், புதிய ஃபோட்டோஸ்ட்ரீம் அப்ளிக்கேஷன் பாஸ்புக் அப்ளிக்கேஷன், டீப்பர் இன்டகிரேஷன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற ஏராளமான புதிய வசதிகளை ஆப்பிள் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பெறலாம்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனையும், ஆன்ட்ராய்டு பீம் அப்ளிக்கேஷன், உயர்ந்த துல்லியம் கொண்ட கான்டாக்ட் ஃபோட்டோஸ், ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பட்டன் ஆகியவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். அதிலும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 1.9 மெகா பிக்ஸல் கேமராவினையும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வெர்ஷன் மாடல்களை வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் $199 (ரூ. 11,000) விலையினையும், 32 ஜிபி வெர்ஷன் மாடல் (ரூ. 16,500) ஒட்டிய விலையினையும், 64 ஜிபி வெர்ஷன் மாடல் $399 (ரூ.22,000) விலையினையும் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை இன்னும் சரிவர அறிமுகம் செய்யப்படவில்லை.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வெர்ஷன் ரூ. 36,900 விலையிலும், 32 ஜிபி வெர்ஸன் ரூ. 38,900 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X