ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 ஆண்ட்ராய்ட் ஷார்ட்-கட்ஸ்
ஆண்ட்ராய்டு போன் என்பது தற்போது மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகிவிட்டது.

ஆனாலும் ஆண்ட்ராய்டு போனில் உள்ள அனைத்து அம்சங்களையும் நாம் உபயோகப்படுத்துகின்றோமா? என்று கேட்டால் பலர் இல்லை என்ற பதிலைத்தான் தருவார்கள்.
கைவிடப்படுகிறது : கூகிளின் லட்சிய திட்டம் ஆரா..!
அதைவிட மேலாக ஒரு ஆண்ட்ராய்டு போனில் என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றது என்பதையே பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை.
ஸ்மார்ட்போன் உங்களைப் பற்றி என்ன சொல்லுது.??
இந்நிலையில் தற்போது வெளிவரும் ஆண்ட்ராய்டு போன்களில் பல ஷார்ட்-கட் முறைகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய ஷார்ட்-கட்-ஐ தற்போது பார்ப்போம்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்க்ரீனை பை-பாஸ் மூலம் லாக் செய்யுங்கள்
ஒரு ஆண்ட்ராய்டு போனில் நமது பல ரகசியங்கள் அடங்கிய டேட்டாக்கள் இருக்கும் என்பதால் எப்போதுமே பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் லாக் செய்து வைப்பது வழக்கம். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போனில் உள்ள பை-பாஸ் ஸ்க்ரீன் லாக்கை பயன்படுத்துவது மிக எளியது. இடஹியும் ஒருமுறை பயன்படுத்தி பாருங்களேன்.

அழைப்பை தவிர்க்க டெக்ஸ்ட் மெசேஜ் பயன்படுத்துங்கள்
ஒரு நல்ல ஸ்மார்ட்போன் உங்கள் பர்சனல் செகரெட்ரியை விட இருமடங்கு உபயோகமாக இருக்கின்றது. இந்நிலையில் நீங்கள் ஒரு அழைப்பை அட்டெண்ட் செய்ய முடியாத இடத்தில் இருக்கும்போது அந்த அழைப்பிற்கு டெக்ஸ்ட் மூலம் பதிலளிக்கலாம். மீட்டிங் அல்லது முக்கியமான இடத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உங்களுடைய நிலைமையை டெக்ஸ்ட் மூலம் தெரியப்படுத்துங்கள் இதற்கு செட்டிங் சென்று டெக்ஸ்ட் ஆப்சனை ஆன் செய்ய வேண்டும்

கேமிராவை உடனே ஒப்பன் செய்ய வேண்டுமா?
நீங்கள் காணும் ஒரு காட்சியை உடனடியாக போட்டோவோ அல்லது வீடியோவோ எடுக்க வேண்டுமானால் உங்கள் கேமிரா உடனே ஓப்பன் ஆக வேண்டும். அதற்கு குவிக் கேமிரா ஆப்சனை நீங்கள் பயன்படுத்த வேண்டும். பத்திரிகை புகைப்பட நிருபர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்

காண்டாக்ட் விட்ஜெட்டை பயன்படுத்துங்கள்
அவசரமாக ஒருவருக்கு அழைப்பு விடுக்க, மெசேஜ் அனுப்ப, இமெயில் அனுப்ப நீங்கள் காண்டாக்ட் விட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும். உங்கள் அட்ரஸ் புக்கில் சென்று நீங்கள் விரும்பை காண்டாக்டை தேடுவதற்கு பதில் இந்த ஷார்ட் கட் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

'ஓகே கூகுள்' உங்களுக்கு பயன்படும்
உங்கள் ஆண்ட்ராய்டு போன் இண்டர்னெட் கனெஷனில் இருக்கும்போது கூகுள் சியர்ச்-ஐ ஒப்பன் செய்து ஓகே கூகுள் என்று மூன்று முறை கூறி பதிவு செய்துகொண்டால் உங்களுக்கு எல்லாமே மேஜிக் ஆக நடக்கும். நீங்கள் கால் செய்ய வேண்டிய நபரின் பெயரை வாய்ஸில் கூறினால் போதும் உடனே அந்த நபருக்கு கால் போகும். அதேபோல்தான் மெசேஜும். இதை பயன்படுத்தி பாருங்கள் அசந்துவிடுவீர்கள். க


Click it and Unblock the Notifications








