ஸ்மார்ட்போன் உங்களைப் பற்றி என்ன சொல்லுது.??

Written By:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் இடையே நடக்கும் போட்டியில் புதிய திருப்பு முனை அமைந்துள்ளது. இதுவும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சாதகனமானதாகவே இருக்கின்றது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் சில சுவாரஸ்ய தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.

ஸ்மார்ட்போன் கருவிகள் உங்களைப் பற்றி என்ன சொல்லும்.?? இந்தக் கேள்விக்கு பதில் தேடியுள்ளது இந்த ஆய்வு. லின்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு சுவாரஸ்யங்களை வழங்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்:

ஐபோன்:

அதன் படி ஐபோன் தேர்வு செய்வோரை விடக் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் மிகவும் நேர்மையாகவும், பணிவாகவும் இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

லின்கன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை தலைவர் மற்றும் அவரது மாணவர்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இரு தரப்பு பயனர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதிப்பீடு:

மதிப்பீடு:

முதல் ஆய்வில் சுமார் 240 பயனர்கள் கலந்து கொண்டனர், இவர்களிடம் வழங்கப்பட்ட கேள்வி கையேட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில் வைத்து அவர்களின் குணாதிசயங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் ஐபோன் பயனர்களை விட ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிகளவு நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தது தெரியவந்திருக்கின்றது.

பயனர்கள்:

பயனர்கள்:

மற்றொரு கேள்வி கையேட்டை வைத்து மேற்கொண்ட ஆய்வில் சுமார் 500 ஸ்மார்ட்போன் பயனர்கள் கலந்து கொண்டனர். இதிலும் ஆண்ட்ராய்டு பயனர்கள் நேர்மையானவர்களாகவும், உண்மையாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

இந்த ஆய்வின் மூலம் பல்வேறு ஸ்மார்ட்போன் பயனர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் அவரை பற்றி அதிகம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது என ஆய்வு தலைவர் ஷா தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
What your smartphone says about you Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot