அவ்ளோ தான் நம்மள முடிச்சு உட்டாங்க! இனி எந்த Phone விலையும் குறையாது.. OnePlus, Realme-ஐ தொடர்ந்து POCO பகீர்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15ஆர் மற்றும் ஒட்டுமொத்த ரியல்மி 16 சீரீஸ் மீதான திடீர் விலை உயர்வை தொடர்ந்து, போக்கோ நிறுவனமும் இந்தியாவில் அதன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மற்றும் போக்கோ எம்8 ஆகிய மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
மேற்குறிப்பிட்ட போக்கோ போன்களின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விற்பனையாளரான பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, போக்கோ எம்8 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இப்போது ரூ.20,999 ஆகும். இதேபோல போக்கோ எக்ஸ்8 ப்ரோவின் விலை ரூ.34,999 ஆகவும், போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸின் விலை ரூ.44,999 ஆகவும் உயர்ந்துள்ளது.

போக்கோ எம்8 (POCO M8) ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு பதிலாக ரூ.2,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ19,999 க்கு பதிலாக ரூ 3,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கடைசியாக போக்கோ எம்8 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.3,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கு பதிலாக ரூ.2000 விலை உயர்த்தப்பட்டு ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கு பதிலாக ரூ.2000 விலை உயர்வை பெற்று ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.42,999 க்கு பதிலாக ரூ.2000 விலை உயர்த்தப்பட்டு ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.46,999 க்கு பதிலாக ரூ.2,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.48,999 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோவின் தாய் நிறுவனமான ஷாவ்மீ ஆனது, ரெட்மி நோட் 15 சீரீஸ் (Redmi Note 15 Series) போன்ற தனது பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை முன்பே உயர்த்தியிருப்பதை கருத்தில் கொண்டால், அதிகரித்து வரும் மெமரி செலவுகளை சமாளிக்கவும், முக்கிய ஸ்டோரேஜ் பாகங்களின் விநியோகத்தில் உள்ள பற்றாக்குறையை ஈடுகட்டவும் போக்கோவும் அவ்வாறே செய்துள்ளது போல் தெரிகிறது.
தற்போது ரூ.20,999-க்கு விற்பனையாகும் போக்கோ எம்8, சில வாரங்களுக்கு முன்பு அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்டுடன் நேரடியாக போட்டியிடுகிறது. நார்ட் சிஇ 6 லைட்டில் உள்ள மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் சிறந்த பெஞ்ச்மார்க் நம்பர்களை வழங்கக்கூடும் என்றாலும், நார்ட் சிஇ 6 லைட்டின் எல்சிடி பேனலை காட்டிலும் - கர்வ்டு அமோலெட் டிஸ்பிளேவை வழங்குவதன் மூலம் போக்கோ எம்8 சிறந்து விளங்குகிறது.
சுருக்கமாக சொன்னால், நீங்கள் ஒரு துடிப்பான டிஸ்பிளே, குறைந்த விலையில் ஒரு பிரீமியம் தோற்றமுடைய வடிவமைப்பு ஆகியவற்றை விரும்பினால், அதன் கர்வ்டு டிஸ்பிளேவின் காரணமாக, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மற்றும் ஐக்யூ இஸட்11எக்ஸ் போன்ற போட்டியாளர்களை விட போக்கோ எம்8 ஆனது இப்போதும் கூட ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலை பொறுத்தவரை, இப்போது இது ஐக்யூ 15ஆர் உடன் போட்டி போடுகிறது. செயல்திறனை மையமாக கொண்ட இந்த இரண்டு மிட்-பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குவதால், எதை வாங்கினாலும் நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை போக்கோ ஒரு படி மேலே உள்ளது, ஏனெனில் இது ஒரு பெரிய 9000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இறுதியாக, இந்தியாவில் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட்டை கொண்ட மிகவும் மலிவு விலை போன்களில் ஒன்றாக போக்கோ எக்ஸ்8 ப்ரோ தொடர்கிறது. ஏனெனில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோவின் விலை ரூ.38,999 ஆக உள்ளது. இருப்பினும், பேக் பேனலில் உள்ள அதன் பெஸ்ட் 50MP ப்ரைமரி மற்றும் 50MP அல்ட்ராவைடு காம்போ காரணமாக மோட்டோரோலா கேமராக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications