Home
Mobile

என்ன ரங்கா இதெல்லாம் நியாயமா.. 2வது Price Hike.. ரூ.7000 எகிற 7400mAh பேட்டரி OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்று - அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள் இரண்டாவது விலை உயர்வை பெற்றுள்ளது. அது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த டிசம்பர் 2025 இல் இந்திய சந்தையில் அறிமுகமானது.

ஆரம்பத்தில் ரூ.47,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இப்போது ரூ.54,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், இந்த ஸ்மார்ட்போனின் மீது அறிவிக்கப்பட்ட ரூ.2,500 உயர்விற்கு மேல், இப்போது மேலும் ரூ.4,500 விலை உயர்வு சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ.7000 எகிற 7400mAh பேட்டரி OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த சமீபத்திய விலை உயர்வுடன், ஒன்பிளஸ் 15ஆர் அதன் அறிமுக விலையை விட இப்போது ரூ.7,000 அதிகமாகியுள்ளது. இந்த திருத்தப்பட்ட / புதிய விலை அமேசான் இந்தியாவிலும் (Amazon.in) பிரதிபலிக்கிறது. இந்த சமீபத்திய விலை உயர்வுக்கான காரணத்தை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், தற்போது பரந்த அளவில் ஸ்மார்ட்போன் துறையை பாதிக்கும் ஒரு பிரச்சினையான, அதிகரித்து வரும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் செலவுகளே இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

ரூ.7000 விலை உயர்விற்கு பின்பும் கூட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை இப்போது வாங்கலாமா? ஒன்பிளஸ் 15ஆர் இப்போது ஒன்பிளஸ் 13எஸ் மாடலை விட விலை அதிகமாக உள்ளது. ஒன்பிளஸ் 13எஸ் என்பது கடந்த ஆண்டு வெளியான ஒரு காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும், இதன் பேஸிக் வேரியன்ட் தற்போது ரூ.52,999 க்கு விற்கப்படுகிறது. ஆக நீங்கள் ஒன்பிளஸ் 3எஸ் மாடலையும் இங்கே ஒப்பிட்டு பார்க்க வேண்டும்:

ஒன்பிளஸ் 15ஆர் VS ஒன்பிளஸ் 13எஸ் ஒரு சிம்பிள் கம்பாரிசன் (எளிய ஒப்பீடு):
- 165ஹெர்ட்ஸ் 6.83-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே VS 120ஹெர்ட்ஸ் 6.32-இன்ச் FHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 VS ஸ்னாப்டிராகன் 8 எலைட்சிப்செட்

- 50எம்பி ப்ரைமரி + 8எம்பி அல்ட்ராவைட் கேமரா VS 50எம்பி ப்ரைமரி + 50எம்பி டெலிபோட்டோ
- 32எம்பி செல்பீ கேமரா VS 32எம்பி செல்பீ கேமரா
- 7400mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் VS 5500mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக்

ஒன்பிளஸ் 15ஆர் ஒரு பெரிய பேட்டரியை கொண்டுள்ளது, இது ஒன்பிளஸ் 13எஸ்-ஐ விட இதை சற்றே பருமனாகவும் ஆக்குகிறது. மேலும், இது சமீபத்திய ஆக்சிஜன்ஓஎஸ் 16 உடன் வருகிறது, ஒன்பிளஸ் 13எஸ் மாடலும் அதே சாஃப்ட்வேரை அப்டேட் மூலம் பெறுகிறது - இது அதன் வாக்குறுதியளிக்கப்பட்ட நான்கு ஓஎஸ் மேம்படுத்தல்களின் ஒரு பகுதியாகும்.

ஆயுட்காலத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஒரு சிறிய சாதகத்தைக் கொண்டுள்ளது, இதன் ஆதரவு 2032 வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் ஒன்பிளஸ் 13எஸ்-க்கான ஆதரவு 2031-ல் முடிவடைய வாய்ப்புள்ளது. மேலும், மென்மையான அனுபவத்திற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களில் மட்டும், ஒன்பிளஸ் 15ஆர் ஆனது கேமிங்கிற்கு 165fps-ஐ வழங்குகிறது. கூடுதல் விலைக்கு, ஒன்பிளஸ் 13எஸ்-ஐ விட இது வழங்கும் உண்மையான மேம்படுத்தல்கள் இவைகள் மட்டுமே ஆகும்.

ஒப்பிட்டு பார்க்கையில், ஒன்பிளஸ் 13எஸ் ஆனது டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய அதிக ஆற்றல் திறன் கொண்ட டிஸ்பிளே மற்றும் அதன் ஸ்மால் ஸ்க்ரீன் அளவிற்கு பொருத்தமான பேட்டரியைக் கொண்டுள்ளது, இது அன்றாட பயன்பாடு மற்றும் கடினமான பணிகள் ஆகிய இரண்டிற்கும் சமமான திறனை / வசதியை வழங்குகிறது. மேலும், இது ஒரு பிரத்யேக 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உட்பட, சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மேம்பட்ட கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
OnePlus 15R gets second Price Hike in India Now OnePlus 13s Becomes Cheaper than This Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X