எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. OnePlus-ஐ தொடர்ந்து Realme-யும்.. விலை உயர்த்தப்பட்ட மூன்று 5ஜி போன்கள்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனின் விலையை இரண்டாம் முறை உயர்த்தி உள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, ரியல்மி (Realme) நிறுவனம் இன்று முதல் இந்தியாவில் அதன் ரியல்மி 16 சீரிஸ் (Realme 16 Series) மாடல்கள் அனைத்தின் விலைகளையும் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் மெமரி மற்றும் உதிரிபாகங்களின் விலைகளுக்கு மத்தியில், ரியல்மி நிறுவனம் தனது வர்த்தக கூட்டாளிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி, ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) மாடல்களின் சில்லறை விலைகளை மீண்டும் உயர்த்தியுள்ளது. இதோடு ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) மாடலின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி 16 பழைய விலை VS புதிய விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.31,999 இல் இருந்து ரூ.33,999 ஆக உயர்வு
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.33,999 இல் இருந்து ரூ.36,999 ஆக உயர்வு
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.36,999 இல் இருந்து ரூ.39,999 ஆக உயர்வு
ரியல்மி 16 ப்ரோ பழைய விலை VS புதிய விலை:
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.33,999 இல் இருந்து ரூ.39,999 ஆக உயர்வு
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.36,999 இல் இருந்து ரூ.42,999 ஆக உயர்வு
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் பழைய விலை VS புதிய விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.39,999 இல் இருந்து ரூ.46,999 ஆக உயர்வு
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.41,999 இல் இருந்து ரூ.48,999 ஆக உயர்வு
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.44,999 இல் இருந்து ரூ.52,999 ஆக உயர்வு
இந்த சமீபத்திய விலை உயர்வுகளை கணக்கில் கொண்டால், ரியல்மி 16 அதன் அறிமுக விலையை விட இப்போது ரூ.4,000 வரை விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஆகியவை முறையே ரூ.6,000 மற்றும் ரூ.7,000 வரை விலை உயர்வுகளை பெற்றுள்ளன.
ரியல்மி 16 ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் இப்போதும் ரூ.35,000 க்கு கீழ் இருப்பதால், அதன் வேல்யூவிற்கு பெரிய மாற்றம் இல்லை. ஆனால் ரியல்மி 16 ப்ரோவின் 8ஜிபி + 256ஜிபி மாடல் இப்போது, ரியல்மி 16 ப்ரோவை விட மேம்பட்ட பிராசஸர்களை கொண்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) போன்ற ரூ.40,000-க்கும் குறைவான விலை கொண்ட போன்களுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால், அதன் ஆரம்ப விலை இப்போது ரூ.46,999 ஆக உள்ளது. இருப்பினும், இதன் நேரடி போட்டியாளர்களான விவோ வி70 (ரூ. 49,999) மற்றும் ஒப்போ ரெனோ 15 (ரூ.48,999) ஆகியவற்றை விட இந்த விலை குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் உள்ளது.


Click it and Unblock the Notifications