உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

By Siva
|

இன்றைய விஞ்ஞான் உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஸ்மார்ட்போன்களால் ஒருசில கெடுதிகள் நமது உடலுக்கு இருப்பது நமக்கு தெரிந்தாலும் வேறு வழியில்லை. ஸ்மார்ட்போனை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

ஆனால் அதே நேரத்தில் உங்கள் தோலை ஸ்மார்ட்போன்கள் பதம் பார்த்து உங்களை வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

அமேசான் சிறப்பு விற்பனை : புதிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகளவு சலுகைகள்!

ஸ்மார்ட்போன்களை உபயோகிக்காமல் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை ஒருசில முறைகளில் உபயோகப்படுத்தினால் பாதிப்பின் சதவீதத்தை குறைக்க முடியும்.

குறைந்த டேட்டா செலவில் வாட்ஸ்ஆப் கால் நிகழ்த்துவது எப்படி.?

காலை எழுந்தது முதல் இரவு தூங்க போகும்வரை நமக்கு உற்ற நண்பாக இருக்கும் ஸ்மார்ட்போன் நமது உடலுக்கும் அழகுக்கும் வேட்டு வைப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும். எனவே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஐந்து முக்கிய வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

கழுத்து பொசிஸன் எப்படி இருக்க வேண்டும்?

கழுத்து மற்றும் தாடை பகுதிக்கு அருகில் உள்ள தோல்தான் முதலில் செல்போனால் பாதிப்பு ஏற்படுகிறது. ஒருசிலர் மொபைல் போனை காதில் வைத்து கொண்டு கழுத்தை சாய்த்து வைத்து கொள்வார்கள். இது காது மற்றும் கழுத்தின் தோலை பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இதற்கான தீர்வு என்னவென்றால் தலையும் கழுத்தும் நேராக வைத்து மொபைல் போனை பேசினால் இதுபோன்ற தொந்தரவுகளை தவிர்க்கலாம்.

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

ஸ்மார்ட்போன் வெப்பத்தை தவிர்க்க முயற்சியுங்கள்

மணிக்கணக்கில் உங்கள் காதலியுடமோ அல்லது நண்பர்களிடமோ பேசும்போது ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் வெப்பம் உங்கள் உடலுக்கு குறிப்பாக தோலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும். தோல் அலர்ஜியால் பலவித தோய் நோய்கள் உண்டாகி அதனால் இன்னும் பல பிரச்சனைகளும் உருவாகிறது.

போனில் இருந்து வெளிப்படும் வெப்பம் நமது தோலை நேரடியாக தாக்காதவாறு போனை உபயோகிக்கவும். குறிப்பாக லைட்வெயிட் போனை உபயோகித்தால் பாதிப்புகளின் சதவிகித்தை குறைக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

போனின் நேரடி டச்சை தவிர்க்க முயலுங்கள்

மொபைல் போன்களை நேரடியாக காதின் அருகில் வைத்து பேசும்போது போனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் உங்கள் முகத்தின் தோலையோ அல்லது காதையோ பாதிக்கும் தன்மை உடையது. மேலும் மொபைல் போனில் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் ஒளிந்து கொண்டிருக்கும் அபாயம் இருப்பதால் உங்கள் முகம் மற்றும் தோல் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதை தவிர்க்க ஒரே வழி நீங்கள் வயர்லெஸ் ஹெட்போனை உபயோகிங்கள். தற்போதைக்கு இது ஒன்றுதான் தீர்வு

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

மொபைல் போனால் கண்ணுக்கும் பாதிப்பா?

காதில் வைத்து பேசும் மொபைல் போனால் கண்ணுக்கு எப்படி பாதிப்பு வரும் என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். உங்கள் மொபைலில் நீங்கள் இண்டர்நெட்டில் இருக்கும்போதோ, அல்லது எஸ்.எம்.எஸ் படிக்கும்போதோ, சிறிய எழுத்துக்களை கூர்ந்து பார்க்கும்போது உங்கள் கண்கள் பாதிப்பு அடைகிறது. முகத்தின் அருகில் வைத்து கண்களால் உற்று நோக்கும்போது முகபாதிப்பும் ஏற்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம், உங்களுக்குத் தெரிந்திராத தகவல்கள்!

இதற்கு என்ன தீர்வு என்றால், மொபைல் போனில் உள்ள எழுத்துக்களின் வடிவத்தை அதிகரித்து கொள்ளுங்கள். பாண்ட் சைஸை அதிகப்படுத்தி எழுத்துக்களை படித்தால் உங்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

உங்கள் தோலை 5 வழிகளில் பதம் பார்க்கிறதா ஸ்மார்ட்போன்கள்.

புளூ லைட்டை முடிந்தளவு தவிர்க்க பாருங்கள்

மொபைல் போனில் இருந்து வெளிப்படும் ஸ்பெக்ட்ரம் லைட் என்று சொல்லப்படும் புளூலைட் கண்டிப்பாக உங்கள் கண்களை மற்றும் முகத்தை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக நாம் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது.

புளூ லைட் கண்களில் படுவதால் கண்களுக்கு எரிச்சலை தருவது மட்டுமின்றி தூக்கத்திற்கும் இடைஞ்சல் தரும்.

மொபைல் போனில் இருந்து வெளிப்படும் புளூலைட் வெளிச்சத்தை கண்களில் படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் கண்களுக்கு சிறுசிறு பயிற்சிகளும், நல்ல தூக்கத்தையும் கொண்டால் கண்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are some ways how mobile phones are affecting your skin causing aging. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X