ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம், உங்களுக்குத் தெரிந்திராத தகவல்கள்!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் செய்யப்பட்ட நாள் துவங்கி இன்று வரை பல்வேறு பல்வேறு நிறுவனங்களும் தங்களின் டேட்டா சேவைக் கட்டணங்களை குறைத்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜியோ சிம் வாங்கியவர்களோடு இல்லாமல் மற்ற நெட்வர்க் பயன்படுத்துவோரும் ஜியோ போட்டி காரணமாக மூலம் பல்வேறு சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.

மற்ற நெட்வர்க் நிறுவனங்கள் எதுவும் ஜியோவிற்கு இணையானதாக இல்லை என்றாலும், முன்பை விட விலை சற்றே குறைவு என்பதால் ஓரளவு ஆறுதலான விடயமாக இருக்கின்றது. ஜியோ போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல் சார்பில் அறிவிக்கப்பட்ட சேவைத் திட்டங்கள் விலை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31, 2016 வரை அறிமுக சலுகை எனும் புதிய திட்டம் மூலம், ரிலையன்ஸ் ஜியோ அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றது. மேலும் இந்த இலவச சேவைகள் 2017 வரை நீட்டிக்கப்படலாம் என்ற தகவலும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுக நிகழ்வின் போது முகேஷ் அம்பானி பல்வேறு இதர திட்டங்களை அறிவித்தார். அவற்றை இங்குப் பாருங்கள்..

எல்டிஇ-மட்டுமே

எல்டிஇ-மட்டுமே

மற்ற நிறுவனங்களைப் போன்று இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 2ஜி அல்லது 3ஜி போன்ற மற்ற நெட்வர்க்களுக்கு மாறாது, ஜியோ சேவைகள் முழுவதும் எல்டிஇ-ரெடி தொழில்நுட்பம் கொண்டவை ஆகும். இதோடு நாட்டின் முதல் எல்டிஇ-ரெடி சேவை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவச வாய்ஸ் கால்கள்

இலவச வாய்ஸ் கால்கள்

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மூலம் வாழ்நாள் முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதற்கு டேட்டா திட்டங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் டேட்டாவில் இருந்து குறையும்.

சலுகை திட்டங்கள்

சலுகை திட்டங்கள்

மற்ற நெட்வர்க்களுடன் கடும் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் முகேஷ் அம்பானி பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைத் திட்டங்களை அறிவித்தார். அதன் படி திட்டங்கள் ரூ.149/- துவங்கி அதிகபட்சம் ரூ.4,999/- வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே கட்டணம் போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் பொருந்தும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

eKYC ஆக்டிவேஷன்

eKYC ஆக்டிவேஷன்

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களைப் போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தங்களது சிம் கார்டுகளை eKYC முறையில் ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் சிம் கார்டு 15 நிமிடங்களில் ஆக்டிவேட் ஆகிவிடும்.

ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட்

ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க இலவச வை-பை ஹாட்ஸ்பாட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஜியோவை பொருத்த வரை இதனால் நெட்வர்க் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கின்றது. இதோடு பயனர்கள் இலவச ஜியோநெட் டேட்டாவையும் பெற முடியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாணவர் சலுகைகள்

மாணவர் சலுகைகள்

ரிலையன்ஸ் ஜியோ சார்பில் மாணவர்களுக்கு 25 சதவீதம் வரை அதிக டேட்டா வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. டேட்டா திட்டங்களை நீட்டிக்கும் போது மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து கூடுதல் டேட்டாவினை பெற முடியும்.

ரோமிங் இல்லை

ரோமிங் இல்லை

மற்ற டெலிகாம் நிறுவனங்களைப் போன்று இல்லாமல் ரிலையன்ஸ் எவ்வித ரோமிங் கட்டணங்களையும் வசூலிக்காது. வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள டேட்டாவினை மட்டும் பயன்படுத்தும், மேலும் நாடு முழுக்க இண்டர்நெட் இலவசம் ஆகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ பிரீமியம் ஆப்ஸ்

ஜியோ பிரீமியம் ஆப்ஸ்

அனைத்து ஜியோ பயனர்களும் ஜியோவின் பிரீமியம் ஆப்ஸ்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும், அனைத்துத் திட்டங்களுடன் ரூ.15,000 மதிப்புடைய ஜியோ பிரீமியம் ஆப்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Things You Didn't Know About Reliance Jio 4G SIM Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X