விரைவில் வெளியாகவுள்ள ஸ்னாப்டிராகன் 830 SoC உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 2ஜிபி ரேம் உள்ள ஸ்மார்ட்போன் வெளிவந்த போது அதையே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர். 2ஜிபி ரேமில் விதவிதமாக புகைப்படம் முதல் வீடியொ வரை சேவ் செய்து மகிழ்ந்த காலம் உண்டு.

விரைவில் வெளியாகவுள்ள ஸ்னாப்டிராகன் 830 SoC உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்கள்

இந்நிலையில் தற்போது அட்வான்ஸாக 3ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனங்களின் தயவில் சந்தைக்கு வெளிவர தொடங்கியுள்ளது. அதுவும் 3ஜிபி ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலைக்கே சீன நிறுவனங்கள் நமக்கு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ சிம் இதில் தான் நன்கு வேலை செய்யுமா.??

மிக விரைவில் எல்லோர் கைகளிலும் 3ஜிபி போன் தான் இருக்கும் என்ற நிலையை சீன நிறுவனங்கள் ஏற்படுத்தவுள்ளன. அதுமட்டுமின்றி 3ஜிபியை விட அதிக ஜிபி உள்ள அதாவது 4ஜிபி முதல் 6ஜிபி வரையிலான ஸ்மார்ட்போன்கள் வெளிவர தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை திருவிழா மூலம் ரூ.100 கோடி ஈட்டிய லீஇகோ.!

ஆனால் அதே நேரத்தில் இந்த கூடுதல் ரேம்களுக்கு ஏற்றவாறு பிராஸசர்களும் இருந்தால்தான் ஸ்மார்ட்போன் ஸ்மூத் ஆக வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே சிறப்பு சிப்செட்டுக்கள் கொண்ட குவால்கோம், சாம்சங் மற்றும் மெடியாடெக் ஆகிய பிராஸசர்கள் வந்துவிட்டன.

லெனோவா இசெட்5 ப்ளஸ் ரூ.17999/- முதல் மிரள வைக்கும் அம்சங்களுடன்..!

இந்நிலையில் இந்த கட்டுரையில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 பிராஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம். ஸ்னாப்டிராகன் 830 என்பது அட்வான்ஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதை உபயோகிப்பது பெரும் உற்சாகமான அனுபவத்தை தரும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி S8

சாம்சங் கேலக்ஸி S8

பொதுவாக சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு வருடம் இரண்டு விதவிதமான ஃப்ளாக்சிப்களை வெளியிட்டு வருகிறது. ஒன்று அமெரிக்க பயனாளிகளுக்கும் மற்றொன்று அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளின் பயன்பாட்டாளர்களுக்கும் என வெளியீட்டு வருகிறது.

அனேகமாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8மாடலில் குவால்கோமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 830 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் வெளிவந்தால் உலகில் பல வாடிக்கையாளர்கள் இந்த போனுக்கு ரசிகர்களாக மாறிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 4

ஒன்ப்ளஸ் 4

ஒன்ப்ளஸ் 3 உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் இதுவொரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் என்பது புரிந்திருக்கும். ரூ.30,000 விலையில் இவ்வளவு வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போனை ஒன்ப்ளஸ் தவிர வேறு நிறுவனங்கள் தருமா? என்பது சந்தேகமே. ஸ்னாப்டிராகன் 820 SoC பிளாக் ஷிப் லெவல் உள்ள இந்த ஸ்மார்ட்போனை அடுத்து ஒன்ப்ளஸ் 4 மாடலில் ஸ்னாப்ட்ராகன் 830 சிப்செட்டை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

அது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அனுபவத்தையும் தர வாய்ப்பு உள்ளது. ஒன்ப்ளஸ் அந்த அனுபவத்தை தர தயாராக உள்ளது. நீங்கள் அதை அனுபவிக்க தயாராகுங்கள் என்பது தான் முக்கியம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டூரிங் போன் கடேன்சா ( Turing Phone Cadenza)

டூரிங் போன் கடேன்சா ( Turing Phone Cadenza)

டூரிங் நிறுவனம் அடுத்த ஆண்டு ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் உடன் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிருவனம் சொன்னபடி அந்த போனை வெளியிடுகிறதோ இல்லையோ அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை சொன்னபடி வெளியிட்டுவிட்டால் இதுவே அடுத்த ஆண்டின் மிகச்சிறந்த போனாக கருதப்படும். இந்த போனின் வரவை லட்சக்கணக்கான பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி 6

சியாமி மி 6

இந்த ஆண்டு சியாமி நிறுவனம் வெளியிட்ட மி 5' மாடலுக்கு கிடைத்த வரவேற்பே அந்த போனின் வெற்றியை உறுதி செய்தது. ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் கொண்ட இந்த போனை அடுத்து இந்நிறுவனம் வெளியிட உள்ள சியாமி மி 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் இருக்கும் என்ற நம்பிக்க்கை அனைவர் மனதிலும் தோன்றியுள்ளது.

மேலும் ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் உடன் மிக மலிவான விலையில் இந்நிறுவனம் தர வாய்ப்பு உள்ளது என்பது தான் லேட்டஸ்ட் டெக்னாலஜி வைரல் செய்தி

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்

ஏற்கனவே ஸ்மார்ட்போன் சந்தையில் பல நிறுவனங்கள் போட்டியில் உள்ள நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் களத்தில் இறங்கவுள்ளது., இந்நிறுவனம் 2017ஆம் ஆண்டில் ஸ்னாப்டிராகன் 830 மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக சீரியஸாக ஒரு செய்தி உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேலும் இந்த போனில் 8ஜிபி ரேம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் வாடிக்கையாளர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here"s a list of top 5 upcoming smartphones that are expected to feature Snapdragon 830 chipset.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X