Home
Mobile

விற்பனை திருவிழா மூலம் ரூ.100 கோடி ஈட்டிய லீஇகோ.!

By Meganathan

இந்திய சந்தையில் மெல்லக் கால் பதித்த லீஇகோ நிறுவனம். இன்று அனைவரும் அறிந்த நிறுவனமாகியிருக்கின்றது. பல்வேறு சலுகைகள், இலவசங்கள் மற்றும் மலிவு விலை போன்றவை இந்திய சந்தையில் இந்நிறுவனம் பிரபலமாக காரணமாகியிருக்கின்றது. லீஇகோ தனது பயனர்களைக் கவரும் விதமாக EPIC 919 எனும் விற்பனை திருவிழாவினை நடத்தியது.

லீஇகோ நிறுவனம் தனது மிகப்பெரிய விற்பனை திருவிழாவினை செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது, பின் அதிகளவு வரவேற்பு காரணமாக 24 மணி நேரத்திற்கு நீட்டித்தது. விற்பனை முடிவில் லீஇகோ நிறுவனம் புதிய சாதனைப் புரிந்திருக்கின்றது. அதன் படி 70,000க்கும் அதிகமான சூப்பர்போன்கள், 2000க்கும் அதிகமான சூப்பர் டிவிக்களுடன் கிட்டத்தட்ட 20,000 இதர கருவிகளை விற்பனை செய்திருக்கின்றது.

விற்பனை

விற்பனை

லீஇகோ தனது முதல் மற்றும் மிகப்பெரிய விற்பனை திருவிழாவில் ரூ.100 கோடி வரை வியாபாரம் செய்ய திட்டமிட்டு அதனினை மிகச் சுலபமாக அடைந்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து

கருத்து

லீஇகோவின் முதல் விற்பனை திருவிழா குறித்து கருத்து தெரிவித்த அதுல் ஜெயின், 'உலகளவில் நடைபெற்ற மிகப்பெரிய விற்பனை திருவிழா இது என்பதோடு அதிகளவு பயனர்களின் வரவேற்பில் லீஇகோ அதிகளவு மகிழ்ச்சியடைந்திருக்கின்றது' எனத் தெரிவித்துள்ளார்.

சாதனை

சாதனை

உலகளவில் விற்பனையில் சாதனை புரிந்ததோடு இந்திய சந்தையிலும் லீஇகோ விற்பனையில் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. ரூ.100 கோடிக்கும் அதிகளவு விற்பனைக்கு முக்கிய காரணமாக இருந்த இந்திய பயனர்களால் தான் ரூ.100 கோடி மதிப்பிலான வியாபாரம் சாத்தியமானது.

வரவேற்பு

வரவேற்பு

முதல் விற்பனை திருவிழாவில் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இந்திய பயனர்களுக்கு சிறப்பான தள்ளுபடி மற்றும் அதிக தரமுள்ள கருவிகளை வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

லீஇகோவின் முதல் விற்பனை திருவிழாவானது அந்நிறுவனத்தின் லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 'லீஇகோ நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் வளர்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது' என பிளிப்கார்ட் நிறுவனத்தின் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
LeEco Crosses Rs. 100 Crore Mark in their First Ever EPIC 919 Festival in India!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X