ஜியோ சிம் இதில் தான் நன்கு வேலை செய்யுமா.??

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு 4ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோஃபை மைஃபை கருவிகளுக்கும் கிடைக்கின்றது. எனினும் இலவச ஜியோ சேவை எந்தக் கருவியில் சிறப்பாக வேலை செய்யும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கின்றது. அதற்கான பதில் வழங்கும் தொகுப்பாக இது அமைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ரூ.5000 பட்ஜெட்டிலும் 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ஜியோஃபை கருவியின் விலை ரூ.1,999 முதல் துவங்குகின்றது. இதனால் எந்தக் கருவியில் சிறப்பான 4ஜி வேகம் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

சிக்னல்

சிக்னல்

சிகனல் திறன்களைப் பொருத்த வரை 4ஜி கருவிகளுடன் ஒப்பிடும் போது ஜியோஃபை கருவி அந்தளவு சிறப்பானதாக இல்லை என்றே கூற வேண்டும். சிறப்பான சிக்னல் பெற 4ஜி கருவியே சிறந்தது ஆகும். இவை பொதுவாக பேண்ட் 5 அல்லது பேண்ட் 40 பயன்படுத்தும். ஆனால் ஜியோஃபை கருவியானது பேண்ட் 3 பயன்படுத்துகின்றது.

அழைப்புகளின் தரம்

அழைப்புகளின் தரம்

ஜியோஃபை கருவி இந்த அம்சத்தில் சிறப்பானதாக இருக்கின்றது. பொதுவாக ஸ்மார்ட்போன்களில் குறைந்த திறன் கொண்ட முன்பக்க கேமரா இருப்பதால் சிறப்பான வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. ஆனால் வாய்ஸ் கால்களில் சிறப்பான தரம் கிடைக்கும். ஆனால் ஜியோஃபை கருவியில் எச்டி வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும். இந்தக் கருவியில் பில்ட்-இன் வோல்ட்இ கொண்ட ஜியோஜாயின் ஆப் மூலம் இது சாத்தியமாகின்றது.

RF பேண்ட் தேர்வு செய்தல்

RF பேண்ட் தேர்வு செய்தல்

முன்பு தெரிவித்ததை போல ஜியோஃபை கருவியானது பேண்ட் 3 மூலம் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றது. ஸ்மார்ட்போன்களில் பேண்ட் தேர்வு செய்து அதிகளவு சிக்னல் பெற முடியும். பொதுவாக பேண்ட் 40 போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அதிவேக இண்டர்நெட் சேவையை அனுபவிக்க முடியும். ஜியோஃபை கருவியில் RF பேண்ட் மாற்றும் வசதி வழங்கப்படவில்லை.

எஸ்டி கார்டு ஷேரிங்

எஸ்டி கார்டு ஷேரிங்

ஜியோஃபை கருவியை கொண்டு எஸ்டி கார்டு ஷேரிங் மூலம் 32 ஜிபி வரையிலான கிளவுட் சேவையைப் பெற்று அதனை எங்கும் பயன்படுத்த முடியும். இந்த ஸ்டோரேஜ்களை பாஸ்வேர்டு மூலம் பாதுகாத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது. இந்த வசதி ஸ்மார்ட்போன்களில் கிடையாது.

பேட்டரி பேக்கப்

பேட்டரி பேக்கப்

இது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனினை பொறுத்தது ஆகும். ஜியைஃபை கருவியானது 2300 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 5 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் பெற முடியும். உங்களது ஸ்மார்ட்போனில் இதைவிடப் பெரிய பேட்டரி இருந்தால் உங்களது கருவியை சிறப்பானது ஆகும்.

வை-பை ஹாட்ஸ்பாட்

வை-பை ஹாட்ஸ்பாட்

ஸ்மார்ட்போன்களில் 802.11 மோடினை மாற்ற முடியாது. பொதுவாக இவை குறைந்தளவு வை-பை ரேன்ஜ் மட்டுமே வழங்கும். ஜியைஃபை கருவியில் 802.11 மோடினை மாற்றியமைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வை-பை கிடைக்கும் அளவினை நம்மால் மாற்றிமையக்க முடியும்.

தீர்ப்பு

தீர்ப்பு

4ஜி ஸ்மார்ட்போன் அல்லது ஜியோஃபை கருவி என எதைப் பயன்படுத்துவதானாலும் அது உங்களின் சொந்த விருப்பங்களைச் சார்ந்தது ஆகும். அதிகளவு கருவிகளுடன் இண்டர்நெட் பயன்படுத்த ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கருவியைப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Find Out Which Supports Reliance Jio SIM Better Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X