Subscribe to Gizbot

2016ஆம் ஆண்டின் விரும்பத்தக்க ஸ்மார்ட்போனாக ஹவாய் மேட் 9 கூறப்படுவது ஏன்? இதோ ஐந்து காரணங்கள்

Written By:

சமீபத்தில் சீன நிறுவனத்தின் ஹவாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இது ஸ்மார்ட்போனால் அல்லது ஃபேப்லட்டா? என்று கூறப்படும் அளவிற்கு இருந்தது இதன் சிறப்பு.

2016ஆம் ஆண்டின் விரும்பத்தக்க கருவி - ஹூவாய் மேட் 9.? ஏன் தெரியுமா.?

புதிய பல வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன், சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை

அற்புதமான பட்ஜெட் விலையில் இன்று முதல் லெனோவா கே6 பவர், ப்ளிப்கார்டில்.!

சாம்சங் கேலக்ஸி 7 குறித்து ஒருசில குறைகள் வெளிப்பட்ட போது வாடிக்கையாளர்களின் அடுத்த பார்வை ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் மீது விழுந்தது என்றால் அது மிகையில்லை.

உபெர் கேப்ஸ்-ஐ மொபைல் ஆப் இல்லாமல் புக் செய்வது எப்படி?

இந்த ஆண்டின் விரும்பத்தக்க போனாக அனைவரும் இந்த ஸ்மார்ட்போனை பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் தற்போது ஐந்து முக்கிய காரணங்களை பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அளவில் மிகப்பெரியது என்பதே இதன் முதல் ப்ளஸ்

அளவில் மிகப்பெரியது என்பதே இதன் முதல் ப்ளஸ்

ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்போன் சைஸ்களில் அளவில் மிகப்பெரியது. சமிபத்தில் வெளியான ஒன்ப்ள்ஸ் 3T, கேலக்ஸி S7 எட்ஜ், ஐபோன் 7 ஆகியவற்றை ஒப்பிடும்போது மிகப்பெரிய ஸ்க்ரீன் சைஸ் மற்றும் அளவை கொண்டுள்ளதால் பெரிய சைஸ் போனை விரும்புபவர்கள் கண்டிப்பாக இதை வாங்கி வருகின்றனர். இதன் ஸ்க்ரீன் சைஸ் 5.9 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மெட்டல் பாடி அனைவரும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உயர்தரமான பேட்டரி

உயர்தரமான பேட்டரி

பொதுவாக சைஸ் பெரியதாக இருந்தால் சார்ஜ் அதிக நேரம் நிற்காது என்ற குற்றச்சாட்டு பரவி வரும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி உள்ளதால் சார்ஜ் போய்விடுமே என்ற கவலை இன்றி தைரியமாக வாங்கலாம்.

எந்தவிதமான பவர்சேவிங்கையும் பயன்படுத்தாமல் இந்த ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனை 36 மணி நேரம் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். பவர்சேவரை பயன்படுத்தினால் தாராளமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.

மேலும் சார்ஜ் செய்ய நீங்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதில் இணைக்கப்பட்டுள்ள USB-C பவர் அடாப்டரை பயன்படுத்தி இரண்டே மணி நேரத்தில் புல்லாக சார்ஜ் செய்து விடலாம்.

ஆண்ட்ராய்ட் வசதி எப்படி இருக்கும்?

ஆண்ட்ராய்ட் வசதி எப்படி இருக்கும்?

ஒரு ஸ்மார்ட்போனில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் ஆண்ட்ராய்டு தான். அந்த வகையில் இந்த ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் 7.0 உள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்கள் புதுவிதமான அனுபவத்தை பெறுவர்

கேமிரா மற்றும் இமேஜ் குவாலிட்டி எப்படி?

கேமிரா மற்றும் இமேஜ் குவாலிட்டி எப்படி?

வாடிக்கையாளர்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் முன் முதலில் சோதனை செய்வது கேமிராவைத்தான். இந்த ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனில் மூன்று பவர்புல் கேமிராக்கள் உள்ளது. 12 MP தரத்தில் இரண்டு பின் கேமிராக்கள் உள்ளது.

இரண்டிலும் சென்சார் மற்றும் ஜும் வசதி, மோனோகுரோம் சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளது. மேலும் 8 MP அளவில் நல்ல தரமான செல்பி கேமிரா உள்ளது. செல்பி கேமிராவில் 4K வீடியோவை தரமாக படமாக்கலாம்.

பிராஸசர் எப்படி இருக்கும்?

பிராஸசர் எப்படி இருக்கும்?

ஒரு ஸ்மார்ட்போனின் இதயம் போன்று கருதப்படும் பிராஸசர் குறித்து தற்போது பார்ப்போம். இந்த மொபைல் போனில் Mali GPU G71 MP8 சிப்செட் உள்ளது. இதனால் இந்த மொபைல் போனில் கிராபிக்ஸ் நன்றாக வேலை செய்யும். மேலும் 4 GB ரேம் இருப்பதால் பயனாளிகள் கிராபிக்ஸ்-ஐ அதிகம் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட பல்வேறு வசதிகள் கொண்ட ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனை வாங்க கிளம்பிவிட்டீர்களா? உங்களுக்கு வாழ்த்துக்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here's why Huawei Mate 9 Smartphone might be our favourite.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot