Home
How to

வாட்ஸ் அப்-ல் வரும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்...

By Siva

வாட்ஸ் அப்-ல் வரும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்...

வாட்ஸ் அப்-ல் வரும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்...

இளைஞர்கள் உள்பட தற்போது அனைத்து வயதினர்களும் பயன்படுத்தும் மிக முக்கிய சமூக வலைத்தளம் வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப் தற்போது பர்சனல் உறவுகளை மேம்படுத்தவும், அலுவல் காரியங்கள் உள்பட பல்வேறு வகையில் உதவி புரிந்து வருகிறது.

விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி நோட் 2 மாடலின் புதிய தகவல்கள்

இந்நிலையில் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தும் அனைவரும் கிட்டத்தட்ட ஒருசில அனுபவத்தை உணர்ந்திருப்பார்கள் அதுதான் திடீரென வாட்ஸ் அப் குளோஸ் ஆவது, அல்லது. துரதிர்ஷ்டவசமாக வாட்ஸ் அப் உங்கள் ஸ்மார்ட்போனில் மூடப்படுகிறது போன்ற வாசகங்கள் வருவதை பார்த்திருப்பீர்கள்

அமேசான் நிறுவனத்தில் மட்டும் கிடைக்கும் டாப் 10 எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன்கள்

இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு, இதுபோன்ற நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்,.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பழைய மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டும்

பழைய மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டும்

வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான மெசேஜ்கள் நமக்கு வந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை அனைத்து ஒரு குப்பையாக சேர்ந்து வாட்ஸ் அப்-ஐ இயங்கவிடாமல் செய்துவிடும். எனவே பழைய மெசேஜ்கள் மற்றும் தேவையில்லாத மெசேஜ்களை டெலிட் செய்துவிடுங்கள்.

கேட்சி டேட்டா என்றால் என்ன தெரியுமா?

கேட்சி டேட்டா என்றால் என்ன தெரியுமா?

உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெசேஜ்களையும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் போது கூடவே ஒருசில டெம்ப்ரவரி டேட்டாக்களும் வரும். ஆனால் இந்த டேட்டாக்கள் மெசேஜ் வந்தவுடன் பயன்படாது. எனவே இந்த டேட்டாக்களை அவ்வப்போது க்ளியர் செய்தால் உங்கள் போன் சுத்தமாகிவிடும். இதற்கு அப்ளிகேசன் மேனேஜர் சென்று அதில் உள்ள கேட்சி டேட்டா ஆப்சனை தேர்வு செய்து க்ளியர் செய்துவிடவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அப்டேட் ரொம்ப முக்கியம் பாஸ்

அப்டேட் ரொம்ப முக்கியம் பாஸ்

வாட்ஸ் அப் என்றில்லை, எந்த ஒரு ஆப்ஸ்-க்கும் அப்டேட் ரொம்ப முக்கியம். ஸ்மார்ட்போனில் அதுவே அப்டேட் குறித்து நமக்கு ஞாபகப்படுத்தும். அந்த சமயத்தில் சோம்பேறித்தனம் பாராமல் உடனே அப்டேட் செய்துவிடுவது தேவையில்லாத பிரச்சனைகள் தோன்ற வழிவகுக்காது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிம்கார்டு மாற்றிவிட்டீர்களா?

சிம்கார்டு மாற்றிவிட்டீர்களா?

உங்களுக்கு அனேகமாக தெரிந்திருக்கும். வாட்ஸ் அப்-ன் ஒரு அக்கவுண்ட் ஒரே ஒரு சிம்கார்டில் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் சிம்கார்டை மாற்றிவிட்டால் அந்த சிம்கார்டுக்காக வேறொரு புதிய வாட்ஸ் அப் கணக்கு துவங்க வேண்டும். அல்லது பழைய வாட்ஸ் அப் கணக்கு நீடிக்க பழைய சிம்-ஐ பயன்படுத்த வேண்டும்.

ரீ இன்ஸ்டால் செய்யுங்கள்:

ரீ இன்ஸ்டால் செய்யுங்கள்:

மேற்கண்ட அனைத்து வழிகளையும் நீங்கள் தவறாமல் கடைபிடித்தாலும் தொடர்ந்து வாட்ஸ் அப் எர்ரர் உங்களுக்கு வந்து கொண்டிருந்தால் அதற்கு பின் ஒரே ஒரு வழிதான் உள்ளது. உடனே உங்கள் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு பின்னர் பிரஷ்ஷாக மீண்டும் ஒருமுறை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். இனிமேல் உங்களுக்கு எவ்வித தொந்தரவும் நேராது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
If your WhatsApp is crashing frequently your smartphone, check out the list of fixes we have given. It will surely help you to troubleshoot the issue.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X