இழந்த வாட்ஸ் அப் டேட்டாக்களை மீட்க வேண்டுமா? இதோ 10 எளிய வழிகள்

By Siva
|

வாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளத்தில் நாம் ஒவ்வொரு நாளும் பலருடன் பலவிதமான சேட்டிங்கில் இருப்போம். அவற்றில் ஒருசில சேட்டிங் மிக முக்கியமானதாகவும், பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நிலையிலும் இருக்கும்.

இழந்த வாட்ஸ் அப் டேட்டாக்களை மீட்க வேண்டுமா? இதோ 10 எளிய வழிகள்

ஆனால் ஞாபகமறதியாக மற்ற சேட்டிங்கை டெலிட் செய்யும் போது முக்கியமான சேட்டிங்கையும் டெலிட் செய்துவிட்டாலோ, அல்லது ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட கோளாறினால் வாட்ஸ் அப் சேட்டிங் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டாலோ, கவலை வேண்டாம். அதற்கென ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் : சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது??

நீங்கள் ஐஓஎஸ் பயனாளியாக இருந்தால் மிக எளிதாக Stellar Phoenix data recovery என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து நாங்கள் கூறும் ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் இழந்த சேட்டிங் டேட்டாகளை மீண்டும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

பப்ளிக் கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கை லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். இதோ ஐந்து எளிய வழிகள்

இனி டேட்டாக்களை ரிகவர் செய்யும் 10 ஸ்டெப்களை பார்ப்போம்

ஸ்டெப் 1: முதலில் நீங்கள் டவுண்லோடு செய்ய வேண்டியது Stellar Phoenix data recovery ஆப். இது இலவசமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்

ஸ்டெப் 2: டவுன்லோடு செய்தவுடன் அடுத்ததாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்

ஸ்டெப் 3: இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்வது மிக எளிது. ஜஸ்ட் திரையில் தோன்று exe. பைலை இன்ஸ்டால் செய்ய க்ளிக் செய்யுங்கள். பின்னர் அதன் வழிகாட்டுதலின்படி செய்தால் மிக எளிதில் இன்ஸ்டால் ஆகிவிடும்

ஸ்டெப் 4: இன்ஸ்டால் செய்தவுடன் Stellar Phoenix data recovery ஆப் உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் இருக்கும், அந்த ஐகானை டபுள் க்ளிக் செய்தால் உடனே அது ஓப்பன் ஆகிவிடும்

ஸ்டெப் 5: பின்னர் அதில் நீங்கள் ஆன்லைனிலேயே அதற்குரிய கீயின் உதவியுடன் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 6: ரிஜிஸ்டர் வேலை முடிந்தவுடன் பின்னர் ஐபோன் அல்லது ஐபேட்-ஐ கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.

ஸ்டெப் 7: பின்னர் வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்தால் உங்களுடைய வாட்ஸ் அப் டேட்டாக்கள் அனைத்தும் திரையில் தோன்றும். பின்னர் இடதுபுறம் உள்ள வாட்ஸ் அப் பிரிவியூவை பாருங்கள்

ஸ்டெப் 8: அதில் 'Only show Deleted' என்ற ஆப்சன் இருக்கும். ;அதில்தான் நீங்கள் டெலிட் செய்த டேட்டாகள் இருக்கும்

ஸ்டெப் 9: அதில் உங்களுக்கு தேவையான டேட்டாக்களை க்ளிக் செய்து அதை பத்திரமாக சேவ் செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 10: அவ்வளவுதான் நீங்கள் இழந்த ஒரு பொருளை மீட்டது போன்ற சந்தோஷம் இப்போது உங்கள் முகத்தில் தோன்றும்,. இந்த வழிகளை நீங்கள் மட்டும் உபயோகிக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Generally, most of our chat/conversations are important and we take some conscious effort to make sure we never lose them. But in some cases, accidentally they get deleted for some reason. The good news is that there are several options for recovering lost messages.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X