Home
How to

போன் நம்பர் இல்லாமல் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிப்பது எப்படி? 4 எளிய வழிகள்

By Siva

ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். உலகின் அதிக மக்கள் தொகை உள்ள் நாடு சீனா, இந்தியா என்பது அனைவருக்கு தெரியும். இதனை அடுத்து அதிக மக்கள் தொகை உள்ளது ஃபேஸ்புக்கில்தான்.

போன் நம்பர் இல்லாமல் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவதெப்படி.?

ஆம் உலகின் மூன்றாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்று ஃபேஸ்புக்கை கூறலாம். அந்த அளவுக்கு உலகில் உள்ள பல நாடுகளில் கோடிக்கணக்கான நபர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கின்றார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கின்றார்கள் என்று சொல்வதை விட அதற்கு அடிமையாக இருக்கின்றனர் என்றே கூறலாம்.

அமேசான் சிறப்பு விற்பனை : எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

ஆனால் அதே நேரத்தில் நமது ஃபேஸ்புக் பக்கத்தை நம்முடைய பர்சனல் விபரங்களையும் கோடிக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நமது பர்சனல் விபரங்கள் பகிரப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நமது பிரைவசிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட நமது செல்போன் எண் பலருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்

புதிய நோக்கியா டி1சி : தெரிய வந்த 5 விடயங்கள், என்னென்ன..?

அதே சமயத்தில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? என்பதும் சந்தேகம்தான். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் இருக்க முடியாது.

எனவே ஃபேஸ்புக்கில் நமது பர்சனல் மொபைல் எண்ணையோ அல்லது அலுவலக எண்ணை பதிவு செய்தால் நமது பிரைவசி நிச்சயம் பாதிக்கும் என்ற சந்தேகம் இருந்தால் உங்களுக்காக போன் நம்பர் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட ஆரம்பிப்பது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்கு கற்று தருகிறோம். நாங்கள் கூறும் ஒருசில எளிய வழிகளை நீங்கள் போன் நம்பர் இல்லாமல் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து கொள்ளுங்கள்

போன் நம்பர் இல்லாமல் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவதெப்படி.?

ஸ்டெப் 1: ThrowAway Mail என்ற இமெயிலை பயன்படுத்துங்கள்

நீங்கள் நடைமுறையில் எத்தனனயோ இமெயில் ஐடிக்களை உபயோகித்து வந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒப்பன் செய்வதற்காக ThrowAway Mail இணையதளத்திற்கு சென்று ஒரு தற்காலிக இமெயிலை ஆரம்பித்து கொள்ளுங்கள். ப்ன்னர் இந்த இமெயில் அக்கவுண்ட்டை காப்பி செய்து வைத்து கொள்ளவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போன் நம்பர் இல்லாமல் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவதெப்படி.?

ஸ்டெப் 2: ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யுங்கள்

ThrowAway Mail ஆரம்பித்தவுடன் ஃபேஸ்புக் பக்கம் சென்று உங்களுக்கான ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்யும்போது இமெயில் ஐடி என்ற இடத்தில் ஏற்கனவே காப்பி செய்து வைத்திருந்த ThrowAway Mail ஐடியை பேஸ்ட் செய்யவும். தற்போது நீங்கள் ThrowAway Mail ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்டீர்கள்

போன் நம்பர் இல்லாமல் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவதெப்படி.?

ஸ்டெப் 3:போன் நம்பர் கேட்கும் ஆப்சனை ஸ்கிப் செய்துவிடுங்கள்:

பேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்த பின்னர் உங்களிடம் ஃபேஸ்புக், உங்களுடைய மொபைல் நம்பரை கேட்கும். உங்கள் அக்கவுண்ட் குறித்த தகவல்களை பெறுவதற்கும், உங்கள் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலும் இந்த போன் நம்பர் உதவும். ஆனால் இதை நீங்கள் இப்போது ஸ்கிப் செய்துவிடலாம்.

போன் நம்பர் இல்லாமல் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவதெப்படி.?

ஸ்டெப் 4: எப்படி வெரிபிகேஷன் செய்வது?

ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்தவுடன் போன் நம்பர் மூலம்தான் வெரிபிகேசன் நம்பர் வரும். ஆனால் நாம் போன் நம்பர் ஆப்சனை ஸ்கிப் செய்துவிட்டதால் அதற்கு பதிலாக உங்களுடைய ThrowAway Mail முகவரிக்கு வெரிபிகேசன் எண் வரும். நீங்கள் மீண்டும் மெயில் ஐடிக்கு சென்று வெரிபிகேசன் நம்பரை ஃபேஸ்புக் அக்கவுண்டில் பதிவு செய்து உங்களுக்கான ஃபேஸ்புக் ஐடி, போன் நம்பர் இல்லாமலேயே கிடைத்துவிடும். உங்கள் போன் நம்பரை பலர் தெரிந்து கொண்டு டார்ச்சர் செய்வார்களோ என்ற பயமே இப்போது உங்களுக்கு ஏற்படாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Facebook is one social media platform from where any anonymous person can get access to your personal details like the phone number. Here is a way you can avoid that.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X