ரிலையன்ஸ் ஜியோபி-ஐ வைஃபை மொபைல் ஸ்டோரேஜூக்கு மாற்ற செய்ய வேண்டிய 7 எளிய வழிகள்

Written By:

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஜியோ, எதை பார்த்தாலும் ஜியோ பேச்சாகவே உள்ளது. ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி டேட்டாவை வரும் டிசம்பர் 31 வரை இலவசமாக தருகிறது என்பதுதான். இலவச அரிசி கொடுத்தாலே நம்மூர் ஜனங்கள் வரிசையில் வண்டி கட்டி நிற்கும்போது சிம் கொடுத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?

ரிலையன்ஸ் ஜியோபி-ஐ வைஃபை மொபைல் ஸ்டோரேஜூக்கு மாற்ற செய்ய வேண்டிய 7 எளி

இந்நிலையில் LYF நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர்ட்டபிள் வைஃபை டிவைஸ் ஒன்றை வெளியிட்டது. இந்த டிவைஸ் ஜியோபி 2 மற்றும் ஜியோபி 4ஜி ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் டிவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ : லேப்டாப் சார்ஜர் கொண்டு உங்கள் காரை 'ஸ்டார்ட்' செய்வது எப்படி..?

தற்போது நீங்கள் இலவசமாக வாங்கிய ஜியோபி சிம்-ஐ வைபை மொபைல் ஸ்டோரேஜூக்கு மாற்றுவது எப்படி என்பது குறித்த 7 எளிய வழிமுறைகளை பார்ப்போம். இந்த எளிய முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்

ரிலையன்ஸ் ஜியோபி-ஐ வைஃபை மொபைல் ஸ்டோரேஜூக்கு மாற்ற செய்ய வேண்டிய 7 எளி

படி 1: ஜியோபி கார்டில் உள்ள மைக்ரோ சிம் கார்டு வைக்கும் இடத்தில் நீங்கள் தயாராக வாங்கி வைத்திருக்கும் மைக்ரோ SD கார்டை சொருக வேண்டும்.

படி 2: அதன் பின்னர் நீங்கள் செல்ல வேண்டியது அட்மின் பக்கத்திற்குத்தான். அங்கு சென்று முதலில் அட்மினிஸ்ரேட்டரில் லாகின் செய்யுங்க்ள். இதில் லாகின் செய்வத்ற்கு நீங்கள் பாஸ்வேர்டை மூளையை கசக்கி யோசிக்க வேனாம். டீஃபால்ட்டாக அதன் லாகின் பாஸ்வேர்டு 'அட்மினிஸ்ட்ரேட்டர்' (administrator) என்பதுதான்.

ரிலையன்ஸ் ஜியோபி-ஐ வைஃபை மொபைல் ஸ்டோரேஜூக்கு மாற்ற செய்ய வேண்டிய 7 எளி

படி 3: அட்மினிஸ்ட்ரேட்டரில் லாகின் செய்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால் நேராக செட்டிங் என்ற ஆப்சனுக்கு சென்று அங்கு ஸ்டோரேஜ் என்று இருக்கும் ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்

படி 4:அதன் பின்னர் நீங்கள் செல்ல வேண்டிய பகுதி ஸ்டோரேஜ் அக்கவுண்ட் என்ற பகுதி. இங்கு நீங்கள் சென்றவுடன் முதலில் செய்ய வேண்டியதை அதை எனேபிள் (enable) என்று மாற்றுவதுதான்.

அமேசானில் கிடைக்கும் 10 மலிவு விலை புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

படி 5:இந்த நேரத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். ஸ்டோரேஜின் யூசர் நேம் மற்றும் ஸ்டோரேஜ் பாஸ்வேர்டு ஆகிய இரண்டிலும் நீங்கள் 'sdcard' என்றே பயன்படுத்த வேண்டும்

படி 6: இதன்பின்னர் ஸ்டோரேஜ் மோட்-க்கு சென்று 'வைஃபை' ஸ்டோரேஜை செலக்ட் செய்யவும்

படி 7: அவ்வளவுதான், இப்போது நீங்கள் நேரடியாக உங்கள் மைக்ரோ SD ஆக்சஸ் உங்கள் போனில் ஆக்சஸ் ஆகிவிடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Do you know that you can use the Reliance JioFi hotspot as a Wi-Fi storage device? Read more to find out how.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot