இலவசமாக ரிலையன்ஸ் ஜியோ சிம் வழங்கும் ஷாப்க்ளூஸ்.!!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை இலவசமாக வழங்க ஷாப்க்ளூஸ் இணையதளம் முடிவு செய்துள்ளது. அதன் படி ஷாப்க்ளூஸ் தளத்தில் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் அனைவரும் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களின் மூலம் இலவசமாக சிம் கார்டுகளை பெற முடியும்.

இலவசமாக ரிலையன்ஸ் ஜியோ சிம் வழங்கும் ஷாப்க்ளூஸ்.!!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ இணைப்பைப் பயன்படுத்தி பயனர்கள் அன்-லிமிட்டெட் எச்டி வாய்ஸ் கால், மெசேஜிங், வீடியோ கால், அதிவேக இண்டர்நெட் டேட்டா என பல்வேறு சேவைகளை டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவசமாகப் பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ சேவையின் மூலம் பயனர்களால் தரமுள்ள 4ஜி சேவையினை அனுபவிக்க முடியும் என ஷாப்க்ளூஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர் நிதின் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதோடு பயனர்களால் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஷாப்க்ளூஸ் தளத்தில் இருந்து பெற முடியும். டெலிகாம் வட்டாரங்களில் 4ஜி சேவைக்கான கட்டணங்களை ரிலையன்ஸ் ஜியோ மிகவும் குறைவாக நிர்ணயம் செய்துள்ளது. ஜியோ விலைப் பட்டியல் வெளியானதில் இருந்து போட்டி நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.English summary
ShopClues to give Reliance Jio sim cards free Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்