வயது காரணமாக தடை செய்யப்பட்ட யூடியூப் வீடியோக்களை பார்ப்பது எப்படி?
யூடியூப் வீடியோ இணையதளம் இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. சினிமா, விளையாட்டு, பாலியல், டெக்னாலஜி என இந்த இணையதளம் ஒரு வீடியோ விக்கிபீடியா என்றே சொல்லலாம். ஆனால் இந்த இணையதளத்தில் ஒருசில வீடியோக்களை பார்க்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

அந்த நேரத்தில் நீங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக்-இன் செய்தால் தான் அதுபோன்ற வீடியோக்களை பார்க்க முடியும். உங்களுக்கு ஒருவேளை ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றாலோ அல்லது ஜிமெயிலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ உங்களால் நீங்கள் நினைத்த ஒருசில வீடியோக்களை பார்க்க முடியாத நிலை ஏற்படலாம்.
ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லையா..? இதோ எளிய தீர்வுகள்.!
இதுபோன்ற நிலையில் வயது கட்டுப்பாடு காரணமாக பார்க்க முடியாத வீடியோக்களை பார்ப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். இதற்கு நான்கு சுலபமாக வழிகள் உள்ளது.

#1. நீங்கள் எந்த வீடியோவை பார்க்க வேண்டுமோ அந்த வீடியோவின் URLஐ முதலில் செலக்ட் செய்து அதில் உள்ள watch? என்பதை டெலிட் செய்துவிட்டு பின்னர் அந்த URL-ல் உள்ள '=' என்பதற்கு பதிலாக '/'. என்று டைப் செய்துவிட்டு பின்னர் எண்டர் பட்டனை தட்டுங்கள். இப்போது ஜிமெயில் அக்கவுண்டை லாக்-இன் செய்யாமலேயே அந்த வீடியோவை நீங்கள் பார்க்கலாம்.

#2. இதேபோன்று வயது காரணமாக தடை செய்யப்பட்ட வீடியோவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டால் இன்னொரு சுலப வழியும் உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டிய யூடியூப் வீடியோவின் URL-ல் www. மற்றும் youtube ஆகியவற்றுக்கு இடையே nsfw என்பதை டைப் செய்யவும். உதாரணமாக www.nsfwyoutube.com/ இதுபோன்று டைப் அடித்து எண்டர் தட்டுங்கள். இதுவும் தடை செய்யப்பட்ட வீடியோவை பார்க்க உதவும் இன்னொரு வழி ஆகும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#3. மூன்றாவது வழியும் கிட்டத்தட்ட இரண்டாவது வழி போலத்தான். உங்களால் பார்க்க முடியாத யூடியூப் வீடியோவில் உள்ள URL-ல் www. மற்றும் youtube ஆகியவற்றுக்கு இடையே pwn என்பதை இணைத்தாலும் அந்த வீடியோவை லாக்-இன் செய்யாமலேயே பார்க்கலாம்.

#4. நான்காவது வழியும் மிகவும் சுலபமானதுதான். நீங்கள் பார்க்க வேண்டிய URL-ல் www.youtube என்பதை அடுத்து repeat என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் யூடியூப் வீடியோவை லாக்-இன் செய்யாமலேயே பார்க்கலாம். அதாவது அந்த URL, https://www.youtuberepeat.com/ என்று தொடங்க வேண்டும்.
சியோமி ரெட்மீ 4ஏ : என்னென்ன அம்சங்கள்.?
மேற்கண்ட நான்கு எளிய வழிகளை பயன்படுத்தி வயது காரணமாக தடை செய்யப்பட்ட வீடியோக்களை கண்டு மகிழுங்கள். அதே நேரத்தில் ஒரு வேண்டுகோள். ஆபாச வீடியோக்களை பார்க்க இந்த வழிகளை உபயோகிக்காமல் ஆக்கபூர்வமான வீடியோக்களை பார்க்க மட்டும் உபயோகிங்கள்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications