சியோமி ரெட்மீ 4ஏ : என்னென்ன அம்சங்கள்.?
சியோமி நிறுவனத்தின் ரெட்மீ வரிசையில் வெளியாகியுள்ள புதிய கருவியான 4ஏ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள்.
ஆண்ட்ராய்டு சார்ந்த ஓஎஸ் மற்றும் பிற மின்னனு நுகர்வோர் ஆகியவைகளுடன் இணைந்து டிஸைன், முன்னேற்றம் மற்றும் விற்பனை ஆகியவைகளை தனியார் மையமாக நிகழ்த்தும் சியோமி நிறுவனம் சமீபத்தில் அதன் ரெட்மீ வெர்ஷனின் புதிய வரவான 4ஏ கருவியை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் பிளாஷ் சேல், ஆன்லைன் தளங்கள் மூலம் மட்டுமே வியாபாரம் நிகழ்த்தும் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 4ஏ கருவியின் அம்சங்கள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

டிஸ்ப்ளே
நவம்பர் 2016-ல் தொடங்கப்பட்ட சியோமி ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 720 X 1280 என்ற பிக்சல்கள் ரெசெல்யூசன் கொண்ட 5.00 அங்குல டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

ப்ராசஸர் மற்றும் மெமரி
உடன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அது 2ஜிபி ரேம் கொண்டு வருகிறது. மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள முடியும் மற்றும் அதன் இன்டர்னெல் மெமரி 16 ஜிபி ஆகும்.

கேமிரா
கேமிரா துறையை பொருத்தமட்டில் 13எம்பி ப்ரைமரி கேமிரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமிரா கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி
ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இயங்கும் இக்கருவி அன்ரீமூவபில் 3120எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்பபடுக்கின்றது. உடன் அது 139.50X70.40X8.50 (உயரம்xஅகலம் xதடிமன்) என்ற அளவும் மற்றும் 131.50 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இரட்டை சிம் / இணைப்பு வசதி
மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் என ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஆதரவு கொட்டின இக்கருவியில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி மற்றும் 4ஜி ஆகிய இணைப்பு வசதிகளும் கொண்டுள்ளது

பிராக்ஸ்மிட்டி சென்சார்
உடன் இக்கருவியில் பிராக்ஸ்மிட்டி சென்சார், அக்சஸலரோமீட்டர், அம்பீயன்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் ஆகிய அம்சங்களும் அடக்கம்.

மேலும் படிக்க
தற்சமயம் வாங்கத் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள், டாப் 10 பட்டியல்!


Click it and Unblock the Notifications