Home
News

எவ்வித எரர் இன்றி யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது எப்படி?

யூட்யூப் வீடியோக்களைப் பார்க்கும் போது ஏற்படும் முக்கிய எரர் இல்லாமல் வீடியோக்களைத் தங்கு தடையின்றிப் பார்ப்பது எப்படி என இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan

இணையத்தில் அதிகப்படியான வீடியோக்களை வழங்கும் சேவையாகக் கூகுளின் யூட்யூப் இருக்கின்றது. நேரத்தைப் பயனுள்ளதாக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் என எல்லாவற்றிற்கும் யூட்யூப் வீடியோக்கள் நமக்குப் பயனளிக்கின்றது.

இத்தகைய பயனுள்ள யூட்யூப் சேவையில் நாம் அனைவரும் என்றாவது இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். "This video is not available in your country" என்ற தகவலை கண்டு வேறு வழியின்றி மற்ற வீடியோக்களைப் பார்த்திருப்போம்.

நம் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சில வீடியோ தரவுகளைப் பொது மக்கள் பார்வைக்கு வழங்க கூடாது என்பதைக் குறிக்கவே யூட்யூப் இத்தகைய தகவலை வழங்குகின்றது. ஆனாலும் இது போன்ற தரவுகளை வழங்க பல்வேறு இதர சேவைகளும் இருக்கின்றன..

ஹோலா

ஹோலா

கணினிகளின் ஐபி முகவரியை மாற்றி வேலை செய்யும் எக்ஸ்டென்ஷன் தான் ஹோலா. இந்த எக்ஸ்டென்ஷனினை கூகுள் க்ரோம், மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுஸர்களில் பயன்படுத்த முடியும். இந்த எக்ஸ்டென்ஷனில் குறிப்பிட்ட வீடியோ முகவரியினைப் பேஸ்ட் செய்து எளிதாகப் பார்க்க முடியும்.

ப்ராக்ஸ்மேட் மற்றும் ப்ராக்ஸீஸ்

ப்ராக்ஸ்மேட் மற்றும் ப்ராக்ஸீஸ்

ProxMate மற்றும் Proxies மூலம் ஒருவர் தனது ஐபி முகவரியை மறைத்து யூட்யூப் தரவுகளை அனைத்து நாட்டுத் தரவுகளையும் பயன்படுத்த முடியும். இதனால் நம் நாட்டில் இல்லையென்றாலும் மற்ற நாட்டு தரவுகளைப் பார்க்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கன்வெர்டர் டூல்ஸ்

கன்வெர்டர் டூல்ஸ்

நம் நாட்டில் கிடைக்காத வீடியோக்களை அனுபவிக்கச் சிறந்த முறை இது எனலாம். இதற்கு வீடியோக்களைக் கன்வெர்டர் டூல் மூலம் டவுன்லோடு செய்து நேரடியாகப் பார்க்கலாம்.

விபிஎன்

விபிஎன்

விர்ச்சுவல் பிரைவேட் நெட்வர்க் எனப்படும் விபிஎன் இதற்கு நல்ல தீர்வாக இருக்கின்றது. இதற்கு வீடியோ முகவரியினை விபிஎன் மூலம் மாற்ற வேண்டும். இவ்வாறு விபிஎன் முகவரியை மாற்றுவதன் மூலம் வீடியோக்களைத் தங்கு தடையின்றிப் பார்க்க முடியும்.

முகவரி

முகவரி

சில சமயங்களில் யூட்யூப் வீடியோ முகவரியின் இறுதியில் /watch?v= எனச் சேர்க்கலாம். இவ்வாறு செய்வதும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Easy Fixes to “This Video is Not Available in Your Country" Error on YouTube
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X