இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்ய 10 டிப்ஸ்கள்
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக இணணயதளங்கள் பொதுமக்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு உதவும் ஒரு தளம் என்பது போல இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம் என்று கூறினால் அது மிகையாகாது.

பெரும்பாலும் செலிபிரிட்டிகள் உள்ள இந்த தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி நம்முடைய தனித்திறமையை வெளிப்படுத்துவது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி!

1 இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பவர்புல்லான புகைப்படங்களை பதிவேற்றி பெரும்புகழ் பெற்றுள்ள நேசனல் ஜியாகிரபி புகைப்பட கலைஞர் இரா பிளாக் இதுகுறித்து கூறும்போது இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் டார்க் கலராக கலர்புல் புகைப்படங்களை பதிவேற்றினால் நமது தனித்திறமை வெளிப்படும் என்று கூறுகிறார். எனவே உங்கள் இன்ஸ்டாகிராமில் நீங்கள் கலர்புல்லான, பலவித வடிவங்களை புகைப்படங்களை பதிவு செய்யுங்கள்

2. உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது கேமிராவில் உள்ள கிர்ட் ஆப்சனை கண்டிப்பாக பயன்படுத்தி புகைப்படங்கள் எடுங்கள் என்று இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய பயனாளி டான் கோலி கூறியுள்ளார்.
டிசம்பர் 3-க்குள் ஜியோ சிம் ஒன்றை வாங்கி இலவசங்களை அள்ளுங்கள்.!

3. Tandem Reportages நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல புகைப்பட கலைஞருமான மாட்டில்ட் கட்டானி என்பவர் கூறும்போது வணிகரீதியான கேமிராக்களை விட ஸ்மார்ட்போனில் உள்ள கேமிரா ஒளியை வித்தியாசமான முறைகளில் உறிஞ்சி எடுத்து கொள்வதில் அதிக வலிமை உடையது. எனவே ஸ்மார்ட்போன் கேமிரா மூலம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். எனவே புகைப்படம் எடுக்கவுள்ள பொருளுக்கு அல்லது நபருக்கு முன்போ அல்லது பின்போ பவர்புல் லைட்டை உபயோகிங்கள்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4. போட்டொகிராபில் நீங்கள் நிபுணர் ஆகவேண்டும் என்றால் எல்லோரும் எடுக்கும் கோணங்களில் எடுக்காமல் வித்தியாசமான கோணங்களில் எடுக்க பழகுங்கள். நீங்கள் எடுத்த புகைப்படத்தில் இருப்பது என்ன என்பதை பார்ப்பவர்கள் ஒருசில நிமிடங்கள் யோசித்து சொல்லும் அளவுக்கு அந்த பொருள் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதை கூறியவர் பிரிட்டனை சேர்ந்த பிரபல போட்டோகிராமரும், கிராபிக் டிசைனருமான மைக் கஸ் என்பவர்

5. பொதுவாக மோசமான தட்பவெப்ப நிலை என்றால் மனிதர்களுக்கு ஆகாது. ஆனால் இந்த மோசமான சீதோஷ்ணநிலை போட்டோகிராபர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடுமையான பனி, மழை, வெள்ளம் ஆகியவற்றில் எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் தனித்தன்மையை பெறும் என்று கூறுகிறார் ஒயிட் ஹவுசின் அதிகாரபூர்வமான புகைப்பட கலைஞர் பெட்டே செளஸா
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

6. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் இணையதளம் போட்ராயிட் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்-ஐ பயன்படுத்தி மேலும் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து கொள்ளுங்கள்

7. பொதுவக ஒளி தொகுப்புகளை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். குறிப்பாக சூரிய ஒளியின் ஒளித்தொகுப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால் அதன் அழகோ அழகுதான்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

8. பொதுவாக நைட் மோட்-ல் பலர் புகைப்படம் எடுக்க விரும்புவதில்லை. ஆனால் நைட் மோட்-இல் தான் அதிகபட்ச வித்தியாசத்தை புகைப்படங்களில் காட்ட முடியும். முதலில் டார்க் மோட்-இல் புகைப்படம் எடுப்பதில் சிரமம் இருந்தாலும் போகப்போக பழகிவிட்டால் நீங்களும் ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்பட மேதைதான்

9. புகைப்படங்களை எடிட் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சினிமா எடிட்டர் போல அதிகபட்ச எடிட்டிங்கை செய்து புகைப்படத்தின் அழகை கெடுத்துவிட வேண்டாம். சிம்ப்ளான எடிட்டிங் அல்லது தேவையான எடிட்டிங் போதும்

10. கடைசியான ஆனால் முக்கியமான விஷயம் ஒரு புகைப்படம் தேர்ந்த புகைப்படமாக மாற வேண்டுமானால் கேப்ஷன்ஸ் ரொம்ப முக்கியம். பெஸ்ட் கேப்ஷன்ஸ் உள்ள புகைப்படங்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications