விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

By Aruna Saravanan
|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயங்குதளம் தற்சமயம் சுமார் 110 மில்லியனுக்கும் அதிகமான கருவிகளில் செயல் முறை படுத்தியுள்ளனர். இதில் பல புதிய அம்சங்கள் உள்ளன. அதில் revamped start menu, digital assistant cortana action center போன்றவை அடங்கும். அதில் ஏகப்பட்ட மூன்னேற்றம் இருந்தாலும் எரிச்சல் அடைய செய்யும் விஷயங்களும் உண்டு. இதை சரி செய்வதற்கான டிப்ஸ் இங்கே.

 விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

ஆட்டோமேடிக் அப்டேட்ஸை நிறுத்தவும்

விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியாகும் போது பாஸ் அல்லது அப்டேட்களை ஸ்கிப் செய்யும் வசதி வழங்கப்படவில்லை. அதன்பின் மெதுவாக ஆட்டோமேடிக் ஆப்ஸ் அப்டேட் ஆப்ஷனை வழங்கியது. இருந்தும் இன்னும் பாஸ் அல்லது விண்டோஸ் அப்டேட்ஸை நிறுத்துவதற்கான ஆப்ஷனை அளிக்கவில்லை. இங்கே விண்டோஸ் 10 ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸை செயலிழக்கம் செய்வதற்கான வழிகளை பாருங்கள்.

ஆட்டோமேடிக் ரீஸ்டார்ட்டை நிறுத்த

1. ஸ்டார்ட் மெனுவை திறந்து advanced updateஐ தேடி advanced window update option என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. இதன் கீழ் Advanced optionsஐ தேர்வு செய்து மேலே உள்ள செட்டிங்கை Notify to schedule restart என்று மாற்றவும்.

கீலாகரை செயலிழக்கம் செய்யவும்

 விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

இயல்பாகவே விண்டோஸ் 10இல் நீங்கள் டைப் செய்வதையும் மெஷினில் சொல்வதையும் மைக்ரோசாப்ட் கவனிக்கின்றது. இதன் சேவையை மேலும் செம்மைப்படுத்த இந்த feedback பயன்படுத்தி கொள்கின்றது. இதனால் உங்கள் பாதுகாப்பை பற்றி சந்தேகம் எழுந்தால் keylogger அம்சத்தை செயல் இழக்கம் செய்து விடுங்கள். இதற்கு

1. ஸ்டார்ட் மெனு சென்று Settingsஐ திறந்து Privacy settings ஐ கிலிக் ஆன் செய்து அதன் உள்ளே உள்ள General ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் பின் Send Microsoft info about how I write to help use improve typing and writing in the future என்ற ஆப்ஷனை செயலிழக்கம் செய்யவும். இது முடிந்தவுடன் Speech, Inking and Typing menuவை தேடி Stop getting to know me என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதன் செட்டிங்கை off செய்யவும்.

பேன்ட்வித்

 விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

மைக்ரோசாப்ட் உங்கள் நெட் இணைப்பை மற்ற பயனாளர்களுக்கு விண்டோஸ் அப்டேட்ஸை தானாக பகிர்கிறது. இதை peer-to-peer ஃபாஷனாக செய்கின்றது. நல்ல செய்தி என்னவென்றால் இதையும் நிறுத்தி விட முடியும் என்பதே. இதோ இதை நிறுத்துவது எப்படி என்பதை பற்றி காண்போம்.

Settingsஐ திறந்து Update & Security என்பதை கிலிக் செய்து Windows Update பிரிவை இடது பக்கதில் திறந்து வலது பக்கத்தில் இருந்து Advanced options என்ற லிங்கை கிலிக் செய்யவும் அதன் பின் Choose how updates are delivered என்பதை கிலிக் செய்து அதன்கீழ் switch off செய்யவும்.

வை-பை சென்ஸை செயல் இழக்கம் செய்யவும்

 விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

ஸ்டார்ட் மெனுவை திறந்து, வை-பை settingsஐ தேடி Change Wi-Fi settings option என்பதை தேர்வு செய்யவும், அதன் உள் Manage Wi-Fi settingsஇன் மீது கிலிக் செய்து For networks I select, share them with my என்பதன் கீழ் உள்ள ஆப்ஷன்களில் உள்ள டிக்கை நீக்கி விடவும்..

நோட்டிபிகேஷன் தேர்வு செய்வதை நிறுத்தவும்

 விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தால் இதையும் செய்ய வேண்டும்.!!

விண்டோஸ் 10 தற்பொழுது Action Center - popularly known as notifications hub - என்பதுடன் வருகின்றது. இது உங்கள் ஆப்ஸில் உள்ள முக்கியமானவற்றை அப்டேட் செய்யும். இது வேண்டாம் என்று நினைத்தால் இதை செய்யுங்கள்.

ஸ்டார்ட் மெனுவை க்ளிக் செய்து Notifications and actions settings ஐ தேடவும், Notifications என்பதற்கு கீழ், find Show app notifications என்பதை அணைக்கவும், கூடுதளாக select options என்பதில் இருந்து notification வேண்டாம் என்று நினைத்தால் அந்த செட்டிங்கின் கீழ் உள்ள "Show notifications from these apps" இல் நீங்கள் வேண்டாம் என்று நினைக்கும் எல்லா notificationsஐயும் அணைக்கவும்.

மேலும் படிக்க :

குளிர்சாதன பெட்டியை 'இப்படித்தான்' சுத்தம் செய்ய வேண்டும்..!

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி.??

மொபைல்களில் ஜிபிஎஸ் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி.??

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Read Here in Tamil some Default Settings You Should Change Immediately After Installing Windows 10.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more