குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது எப்படி.??

Written By: Aruna Saravanan

இன்று ரெஃப்ரிஜிரேட்டர் எனப்படும் குளிர்சாதன பெட்டி எல்லோர் வீடுகளிலும் இருக்கின்றது என்றே கூற வேண்டும். உணவு பொருட்களை மின்சாரம் மூலம் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும் இந்த உபகரணத்தை எத்தனை பேர் சரியாக பயன்படுத்தி வருகின்றர்.

இந்த செக் லிஸ்டை வைத்து அழுக்கான கலை இழந்த உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியை சற்று நேரத்தில் பளிச்சென செய்யுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

முதலில் குளிர்சாதன பெட்டியின் ப்ளக்கை பிடிங்கி தரைக்கு சற்று மேலே உள்ள செவ்வக பேனலுக்கு இடுக்கில் ப்ரஷ் வைத்து தூசுக்களையும் அழுக்கையும் சுத்தம் செய்யவும்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியின் உள்ளே உள்ள பொருட்களை வெளியே எடுக்கவும். பாலித்தீன் பைகள், டப்பாக்கள், போன்றவற்றை வெளியே எடுத்து தேவையில்லா பொருட்களை குப்பையில் கொட்டி டப்பாக்களை சுத்தம் செய்யவும்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியின் உள் உள்ள அலமாரிகளை வெளியே எடுக்கவும். பின்பு அவற்றை பாத்திரம் கழுவும் தொட்டியில் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய சுடு நீரை பயன்படுத்தவும். டிஷ் வாஷ் சோப் கொண்டு சுத்தம் செய்யவும்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியின் உள்ளே கவனமாக துடைக்கவும். Multisurface ஸ்ப்ரே கொண்டு சுத்தம் செய்தல் அவசியம். உள் சுவற்றையும், அலமாரிகளையும் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும் (ரப்பரால் ஆன டோர் சீலையும் துடைத்தல் அவசியம்). துடைப்பதற்கு பழைய பல் துலக்கும் brushஐ பயன்படுத்தவும்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியின் ப்ளக்கை பொருத்தவும். வெளியே எடுத்த ஜார், பைகள் போன்றவற்றை உள்ளே அழகாக அடுக்கவும். உணவு பொருட்களை பத்திரமாக மூடிய பைகளிலோ ஜார்களிலோ அடுக்கி வைக்கவும்.
குளிர்சாதன பெட்டியின் உள் உள்ள சுவற்றில் உறிஞ்சும் தன்மை கொண்ட கப்களில் பேக்கிங் சோடா பொருத்தவும்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியின் வெளியே சுத்தம் செய்யவும். இனாமல் பூசிய ஸ்டீலால் ஆனது என்றால் சுத்தம் செய்ய multisurface solution கொண்டு பேப்பர் டவலை வைத்து சுத்தம் செய்யவும். அதுவே துருப்பிடிக்காத ஸ்டீல் என்றால் சுத்தமான வெள்ளை வினிகரில் துணியை நனைத்து சுத்தம் செய்தல் வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil How to Clean your refrigerator.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்