மொபைல்களில் ஜிபிஎஸ் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி.??

By Aruna Saravanan
|

நவீன ஸ்மார்ட்போன்களில் இன்டர்னல் ஜிபிஎஸ் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இதனால் சரியான நேவிகேஷன் ஆப்ஸ், லொகேஷன் சர்வீசஸ் மற்றும் கடினமான லொகேஷன் இன்டராக்ஷன் போன்றவைகளை பெற முடிகின்றது. இருந்தாலும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிர்யான ஜிபிஎஸ் சென்சார்கள் இருப்பதில்லை. அம்சங்களிலும், திறன்களிலும் மற்றும் துல்லியம் போன்றவைகளில் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும்.

இதனால் சில போன்களில் ஜிபிஎஸ் செயல்பாடு நன்றாக இருப்பதில்லை. இது வன்பொருள் பிரச்சனையின் காரணமாக நிகழ்கின்றது. போனின் ROM மற்றும் செட்டிங்கின் பயன்பாட்டால் ஜிபிஎஸ் இன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது. இப்பொழுது ஜிபிஎஸ் செயல்பாட்டை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை பற்றி காண்போம்.

High Accuracy Setting Mode

High Accuracy Setting Mode

ஜிபிஎஸ் பயன்பாட்டை சிறந்த முறையில் பெற உங்கள் டிவைஸின் செட்டிங்கில் உயர் துல்லிய முறை இயக்கப்பட வேண்டும். ஆனால் இதனால் பேட்டரி அதிகம் செலவாகும் என்பதை மறுக்க முடியாது. இதை இயக்க, முதலில் செட்டிங் செல்லவும், பின்பு லொகேஷன் சென்று லொகேஷன் சர்வீசஸ் செல்லவும். பின்பு லொகேஷன் சோர்சஸ் கேட்டகரியின் கீழ் மோடை அழுத்தி High Accuracy என்பதை செட் செய்யவும். பேட்டரி அதிகம் செலவானாலும் இப்படி செய்வதால் முடிந்த அளவுக்கு சிக்னல் பெற முடியும்.

Calibrate your compass

Calibrate your compass

உங்கள் திசைகாட்டியை அளவீடு செய்யுங்கள். உங்கள் டிவைசின் மூலம் நேவிகேஷன் ஆப்ஸை பயன்படுத்தி சரியான தகவல் கிடைக்கவில்லையென்றால் பிரச்சனைக்கு காரணம் ஜிபிஎஸ் இன் அளவீடுதான். இதை சரி செய்ய திசைகாட்டியை கேலிபரேச் (calibrate) செய்தல் வேண்டும். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து GPS Essentials appஐ டவுன்லோட் செய்யவும். இதன்மூலம் பல கையில் அடங்கும் அம்சங்களுடன் ஒரு திசைகாட்டியையும் பெற முடியும். இப்பொழுது ஆப்ஸை திறந்து டிவைஸில் அளாவுதிருத்தம் செய்யவும்.

Find out the Issue

Find out the Issue

GPS Essentials appsஐ கொண்டு ஜிபிஎஸ் சிக்னல் கிடைக்காததுக்கு காரணம் வன்பொருளின் பிரச்சனையா அல்லது மென்பொருளின் பிரச்சனையா என்று கண்டு பிடிக்க முடியும்.

Refresh your GPS data

Refresh your GPS data

சில நேரத்தில் உங்கள் டிவைஸ் குறிப்பிட்ட சில ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் மீது அவை குறிப்பிட்ட ரேன்ஞ்குள் இல்லாவிட்டாலும் ஸ்தம்பித்து நிற்கக்கூடும். இதை சரி செய்ய GPS Status & Toolbox ஆப்ஸ்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் தரவுகளை சுத்தம் செய்து புது செயற்கைக்கோள்களை ஆரம்பித்து கொள்ளலாம்.

கட்டிடங்களை தவிர்க்கவும்

கட்டிடங்களை தவிர்க்கவும்

கட்டிடங்கள் பெரியதாக இருப்பதால் அவை சிக்னலை தடுப்பதுடன் பிரதிபலிக்கவும் செய்யும். இதனால் தரவுகள் துல்லியமாக கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil How To Improve GPS Signal On Your Android Smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X