கனவு விலையில் சியோமி மினி ஸ்பீக்கர்; ஆளுக்கு ரெண்டு ஸ்பீக்கர் பார்சல்.!
சியோமி நிறுவனத்தின் புதிய மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மற்றும் 15.6 இன்ச் மி கேமிங் லேப்டாப் உடன் இணைந்து, சியோமி நிறுவனத்தின் மி ஏஐ ஸ்பீக்கர் மினி சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மற்றும் 15.6 இன்ச் மி கேமிங் லேப்டாப் உடன் இணைந்து, சியோமி நிறுவனத்தின் மி ஏஐ ஸ்பீக்கர் மினி சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெயருக்கு ஏற்றபடியே, சியோமி மி ஏஐ ஸ்பீக்கர் மினி ஆனது மிகவும் சிறிய வடிவமைப்பை பெற்றுள்ளது. ஆனாலும் கூட, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சுமார் 35 மில்லியன் புத்தகங்கள் மற்றும் பாடல்களை அணுகும் திறனை கொண்டுள்ளது.

வாய்ஸ்-கண்ட்ரோல்டு அசிஸ்டென்ட்.!
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்பீக்கர், ஒரு இன்டலிஜென்ஸ் வாய்ஸ்-கண்ட்ரோல்டு அசிஸ்டென்ட் ஒன்றையும், ஸ்மார்ட் ஹோம் இன்டர்கிரேஷன் ஆதரவையும் கொண்டுள்ளது. இன்னும் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், இந்த மி ஏஐ ஸ்பீக்கர் மினி ஆனது கூகுள் ஹோம் ஸ்பீக்கர் மற்றும் அமேசான் அலெக்ஸா ஆகியவைகளை "தூக்கி சாப்பிடும்" திறன்களை கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்.!
தோராயமாக ரூ.1,750/-க்கு அறிமுங்கமாகியுள்ள இந்த மி ஏஐ ஸ்பீக்கர் மினி ஆனது அமேசான் எக்கோ டாட் மற்றும் கூகுள் ஹோம் மினி ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மலிவாக உள்ளதென்பது வெளிப்படை. வடிவமைப்பை பொறுத்தவரை, சியோமி மி ஏஐ ஸ்பீக்கர் மினி ஆனது சிறிய, வட்ட வடிவிலான, முழு உலோக உடல் அமைப்பை கொண்ட ஒரு மினி போர்ட்டபிள் (எளிமையாக சுமந்து செல்லக்கூடிய) ஸ்பீக்கர் ஆகும்.

நேவிகேஷன் பட்டன்.!
இன்-பில்ட் மைக்ரோபோன் கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள் ஆனது உங்கள் உள்ளங்கையில் உட்கார்ந்து கொள்ள போதுமானதாக இருக்கும். இந்த சாதனத்தின் மேல் ஒரு நேவிகேஷன் பட்டன் ஒன்று உள்ளது. அது பிளே, பாஸ், நெக்ஸ்ட் மற்றும் மைக்ரோபோனை ஆன்/ஆப் செய்யும் பணிகளை நிகழ்த்தும்.


4 மணி நேர பேட்டரி ஆயுள்.!
வெள்ளை நிற மாறுபாட்டில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த மி ஏஐ ஸ்பீக்கர் மினி ஆனது அவுட்-டோர் செயல்திறனை மேம்படுத்த உதவும் சிவிசி 6.0 நாய்ஸ் ரிடெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. நிறுவனத்தின் படி, இந்த சியோமி ஸ்பீக்கர் ஆனது ஒரு 4 மணி நேர பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும். இந்த சியோமி ஸ்பீக்கர், வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்திய விற்பனையை சந்திக்கலாம்.


Click it and Unblock the Notifications








