இனி 24 மணி நேரம் தான்.. கெடு உடன் WhatsApp-க்கு வந்த புது Temporary அம்சம்.. என்னது.. யாருக்கு யூஸ் ஆகும்?
5 நிமிடங்கள், 1 மணிநேரம், 12 மணிநேரமாக செட் செய்ய உதவும் புதிய ப்ரைவஸி மெசேஜ் அம்சம், மாதம் ரூ.70 சந்தா கட்டணத்தில் எக்ஸ்க்ளூஸிவ் அம்சங்களை வழங்கும் வாட்ஸ்அப் பிளஸ் சேவை என மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பை படுவேகமாக அப்டேட் செய்து வருகிறது.
இந்த வரிசையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது 'சேனல் ஸ்டேட்டஸ்' (Channel Status) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளது. இது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் உள்ள சேனல் அட்மின்கள் தங்களின் சேனல்களுக்குள் நேரடியாக தற்காலிக அறிவிப்புகளை (Temporary updates) பகிர அனுமதிக்கிறது.

பல மாதங்களுக்கு முன்பே, உருவாக்கத்தில் இருப்பதாக கண்டறியப்பட்ட இந்த அம்சம், தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களை சென்றடைந்துள்ளது.
WABetaInfo-வின் சமீபத்திய அறிக்கையின்படி, சேனல் ஸ்டேட்டஸ் அம்சமானது, அட்மின்கள் போட்டோக்கள், வீடியோக்கள், லேஅவுட்கள் மற்றும் டெக்ஸ்ட் வடிவ அப்டேட்களை நேரடியாக சேனல் இன்டர்பேஸில் இருந்து பதிவிட அனுமதிக்கிறது. இந்த அப்டேட், 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே காலாவதியாகிவிடும், எனவே சேனலை பின்தொடர்பவர்கள் அதைப் பார்க்கவும், அதனுடன் தொடர்பு கொள்ளவும் போதுமான நேரம் கிடைக்கும்.
பெர்மனென்ட் ஆன சேனல் போஸ்ட்-ஐ (Permanent channel post) பதிவு செய்யாமல், சரியான நேரத்தில் வரும் அறிவிப்புகள் அல்லது அப்டேட்களை விரைவாக பகிர சேனல் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற சேனல் அப்டேட்களை போலவே, சேனல் கன்டென்ட்-ஐ அணுகக்கூடிய எவரும் இதை பார்க்கவும், பகிரவும் முடியும்.
இந்த தற்காலிக அப்டேட்கள் - வாட்ஸ்அப்பின் அப்டேட்ஸ் டேபில் உள்ள ஸ்டேட்டஸ் ட்ரேயில், காண்டாக்ட்களிடம் இருந்து வரும் வழக்கமான ஸ்டேட்டஸ் அப்டேட்களுடன் தோன்றும். இதன் மூலம், பின்தொடர்பவர்கள் தாங்கள் பின்தொடரும் சேனல்களை திறக்காமலேயே, அவைகள் பகிரும் அப்டேட்களை எளிதாக பார்த்துக்கொள்ள முடியும்.
ஒரு சேனல் ஸ்டேட்டஸ் அப்டேட்டை உருவாக்க, அட்மின்கள் தங்கள் சேனலை திறந்து, 'கிரியேட் ஸ்டேட்டஸ்' (create status) விருப்பத்தை கிளிக் செய்யலாம். பின்னர் அவர்கள் புகைப்படம் அல்லது வீடியோ போன்ற கன்டென்ட்டை பதிவேற்றி, தலைப்புகள், ஸ்டிக்கர்கள் அல்லது பிற திருத்தங்களை செய்து வெளியிடலாம்.
ஒரு நேரத்தில் ஒரு சேனலை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும், எந்த சேனலில் அப்டேட் வெளியிடப்படும் என்பதை சரிபார்க்க அல்லது பதிவிடுவதற்கு முன்பு சேனல்களை மாற்றிக்கொள்ளவும் வாட்ஸ்அப் அட்மின்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அப்டேட்களை பார்க்கும் பின்தொடர்பவர்களுக்காக, வாட்ஸ்அப் இன்டராக்ஷன் விருப்பங்களையும் அறிமுகப்படுத்துகிறது.
பயனர்கள் லைக் செய்வதன் மூலம் ரியாக்ட் செய்யலாம் அல்லது அப்டேட்டை தங்கள் ஸ்டேட்டஸில் பகிரலாம் அல்லது தங்கள் காண்டாக்ட்களுக்கும் கூட அனுப்பலாம். பின்தொடர்பவர்கள் ஸ்டேட்டஸை அடையாளம் காண, அவர்களின் காண்டாக்ட்களால் பகிரப்படும் வழக்கமான ஸ்டேட்டஸ் அப்டேட்களிலிருந்து இந்த அப்டேட்களை வேறுபடுத்திக் காட்ட, இன்டர்பேஸின் மேற்பகுதியில் 'சேனல் ஸ்டேட்டஸ்' என்ற லேபிள் தோன்றும்.
இந்த அம்சம் தற்போது படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது, மேலும் இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் வாட்ஸ்அப் இதை மேலும் பல பயனர்களுக்கு விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் சேனல்களில் புதிய டூல்களை தொடர்ந்து சேர்த்து வரும் வேளையில் இந்த புதிய வெளியீடு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications