WhatsApp-க்கு வந்த புது லிமிட்.. இனி 5 நிமிடங்கள், 1 மணிநேரம், 12 மணிநேரமாக செட் செய்யலாம்.. எதை?
வாட்ஸ்அப் ஒரு புதிய ப்ரைவஸி அம்சத்தை சோதித்து வருகிறது. இது, மெசேஜ்கள் அனுப்பப்பட்டதில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மட்டும் நீக்கப்படுவதற்கு பதிலாக, அவை படிக்கப்பட்ட பிறகு தானாகவே நீக்கப்பட அனுமதிக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் காணப்பட்டது, இப்போது சில ஐபோன் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு வெளியிடப்படுகிறது.
சுவாரசியமாக இந்த அம்சத்தின் கீழ், ஒரு பெறுநர் மெசேஜ்களை திறந்த பிறகு, அவை எவ்வளவு நேரம் பார்வைக்கு தெரியும் (How long messages remain visible) என்பதற்கான டைம் லிமிட்டையும் அனுப்புநரால் செட் செய்ய முடியும். அதே நேரத்தில், படிக்கப்படாத மெசேஜ்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே நீக்கப்படுவதையும் இந்த அம்சம் உறுதி செய்கிறது.

வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான அப்டேட்களை வழங்குவதற்கு பெயர்போன WABetaInfo-வின் சமீபத்திய வலைப்பதிவின்படி, ஆப்பிளின் டெஸ்ட்ஃப்ளைட் திட்டத்தின் மூலம் ஐஓஎஸ் வெர்ஷன் 26.19.10.72-க்கான வாட்ஸ்அப் பீட்டாவை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. பரவலான வெளியீட்டிற்கு முன்பு, ஆப் ஸ்டோர் வெர்ஷனில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கும் இந்த விருப்பம் கிடைக்கக்கூடும்.
இந்த புதிய அமைப்பு - வாட்ஸ்அப்பின் டிஸ்அப்பியரிங் மெசேஜ்களுக்கான கண்ட்ரோல்களுக்குள் "ஆப்டர் ரீடிங் " என்ற விருப்பமாக தோன்றுவதாக கூறப்படுகிறது. மெசேஜ் அனுப்பப்பட்ட உடனேயே காலக்கெடுவை தொடங்குவதற்கு பதிலாக, பெறுநர் மெசேஜ்களை படித்த பிறகு அவற்றை நீக்க இது பயனர்களை அனுமதிக்கிறது.
பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ் படிக்கப்பட்ட பிறகு நீக்கப்படும் நேரத்தை 5 நிமிடங்கள், 1 மணிநேரம் அல்லது 12 மணிநேரமாக செட் செய்யலாம். முன்னரே குறிப்பிட்டபடி பெறுநர் மெசேஜை திறக்கவில்லை என்றால், 24 மணிநேரத்திற்கு பிறகு வாட்ஸ்அப் அதை தானாகவே நீக்கிவிடும்.
இந்த அம்சம், வாட்ஸ்அப்பின் ஏற்கனவே உள்ள டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. அந்த அமைப்பு தற்போது 24 மணிநேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என நேரங்களை வழங்குகிறது. பயனர்கள் இந்த அமைப்புகளை தனிப்பட்ட உரையாடல்களுக்கு பயன்படுத்தலாம் அல்லது அனைத்து புதிய உரையாடல்களுக்கும் டீபால்ட் ஆக செட் செய்யலாம்
குறிப்பிடத்தக்க வகையில், இந்த புதிய நேரம் விருப்பத்திற்குரியது என்றும், இதை கைமுறையாக இயக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பயனர்கள் இந்த அம்சத்தை இயக்க முடிவு செய்யும் வரை, ஏற்கனவே உள்ள உரையாடல்கள் வழக்கம் போல் செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தின்படி, மெசேஜின் அனுப்புநரின் நகல் நீக்கப்படலாம் என்றும், பெறுநருக்கான நேர கணக்கு, மெசேஜ் படிக்கப்பட்ட பின்னரே தொடங்கும் என்றும் அந்த பதிவு விளக்குகிறது.
இந்த அம்சம் எப்போது அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதை வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் வரும் வாரங்களில் இது மேலும் பல பீட்டா சோதனையாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் (WhatsApp Account) இல்லாதவர்களுக்கு கூட வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்ப அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை, வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு இருந்தது
இந்த அம்சம் - கெஸ்ட் சாட்ஸ் (Guest Chats) என அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் - வாட்ஸ்அப்பில் இல்லாத பயனர்கள், ஒரு பாதுகாப்பான வெப் லிங்க் (Secure web link) வழியாக சாட்டில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாக சாட் செய்ய ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டிய அவசியம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய கெஸ்ட் சாட்கள் ஒரு என்க்ரிப்ஷன் கீயை (encryption key) உருவாக்குவதற்கான தனித்துவமான அடையாளங்காட்டியை (Unique identifier) பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது வாட்ஸ்அப் தளத்தில் நடக்கும் சாதாரண உரையாடல்களுக்கு பயன்படுத்தும் அதே எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை (End-to-end encryption) செயல்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications